மேலும் அறிய

Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்

மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்து இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் தனியார் பெண்கள் விடுதி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இதில் மதுரை , தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  15க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்தும் படித்துவருகின்றனர. இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை  வெளியேறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் பதறியடித்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் விடுதிக்குள் சென்றூ தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் 

இந்நிலையில் விடுதியில் இருந்த பிரீட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டர் மூலமாக வெளியேறிய  நச்சுப் புகையால் 5 பேர் மயங்கி விழுந்த நிலையில் பரிமளா என்ற ஆசிரியையும், சரண்யா என்ற பெண் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.  இதைத்தொடர்ந்து விடுதி்வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ள  கட்டிடத்தில் உரிமையாளர் கூறுகையில் ’’ஏற்கனவே பல ஆண்டுகளாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பழமையான கட்டிடம் என மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த நோட்டீசை விடுதி உரிமையாளரிடம் வழங்கியதாகவும் ஆனாலும் தொடர்ந்து விடுதி செயல்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் விடுதிக்கான அனுமதி பெறாமல் இதுபோன்று விடுதி செயல்பட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  மேலும் அவசர கால பாதை உள்ளிட்டவைகள் எதுவும் இல்லாமல் சிறைச்சாலை அந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது.ஏற்கனவே மாநகராட்சி சார்பில் உரிய எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையும் அதனை அலட்சியமாக கருதியதால் இது போன்ற விபத்தில்  உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர் 

அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல பெண்களின் கல்வி சான்றுகள் முழுவதுமாக  எரிந்து கருகியதால் அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

விடுதியின் உரிமையாளரே அங்கு வார்டனாக இருந்த  புஷ்பா என்பவரே. அவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விடுதியில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை பெறுவதில் காவல்துறையினருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget