Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
ஹரியானாவில் மாதவிடாய் காரணமாக பணிக்கு லேட்டாக வந்த தூய்மை பணியாளர்களை பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஆடையை கழற்றி அந்தரங்க உறுப்பை படம்பிடித்து நிருபிக்க சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள மஹரிசி தயானந்த் பல்கலைகழகத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று பல்கலைக்கழகத்திற்கு ஹரியானா ஆளுநர் அசீம் குமார் கோஷ் வருகை தந்துள்ளார். ஆளுநரின் வருகைக்காக விடுப்பு தினமான ஞாயிறு அன்று தூய்மை பணியாளர்களை பணிக்கு வருமாறு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது 4 பெண்கள் மாதவிடாய் காரனமாக பணிக்கு வரமுடியாது என விடுப்பு கேட்டுள்ளனர். ஆனால் விடுப்பு தர மறுத்த மேற்பார்வையாளர் மாதவிடாயை நிரூபிக்க புகைப்படம் எடுத்து அனுப்புமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பணிக்கு வந்த பெண்கள் மெதுவாக வேலை செய்வதாக அதட்டியுள்ளனர். அப்போது மாதவிடாய் காரணமாக உடல்நலம் சரியில்லை என கூறியதால், சூப்பர்வைசர்கள் வினோத் மற்றும் விதேந்திரா அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்ணை இவர்களை கழிப்பறைக்கு அழைத்து சென்று அந்தரங்க உறுப்பை செக் செய்யுமாறு கூறியுள்ளனர். மேலும் நாப்கினை படம்பிடித்து அனுப்புமாறு மூத்த அதிகாரி கூறியதாகவும் சொல்லியுள்ளனர். இதனை அப்பெண்கள் மறுத்ததால் பணியை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவர்களுக்கு தெரியவர, அந்த பல்கலைக்கழக வளாகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. பெண்களின் உரிமைகள் கேள்விக்குறியாவதாகவும், பெண்களை அவமதிப்பதாகவும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட சூப்பர்வைசர்கள் வினோத் மற்றும் விதேந்திரா மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தற்போது அவர்கள் இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மாதவிடாய் காரணமாக பணிக்கு தாமதமாக வந்த தூய்மை பணியாளர்களை அந்தரங்க உறுப்பை படம் பிடித்து நிரூபிக்க சொன்ன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.





















