Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது இருப்பதாக வெளியாகியுள்ள நிலையில், உமர் ஃபரிதாபாதில் கைதான தீவிரவாத மருத்துவர் ஷகீலின் கூட்டாளி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சிக்னல் அருகே மெதுவாக நகர்த்தப்பட்டு வெடித்து சிதறியது. வெடிக்கும் முன் அந்த காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது. உமர் முகமது ஓர் பயங்கரவாதி என்பதும் ஹரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என்பதும் அம்பலமாகியுள்ளது.
வட இந்தியாவில் ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத நிதி திரட்டுவதில் ஈடுபட்டதாகக் கூறி, ஃபரிதாபாத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதக் குழுவைப் பல மாதங்களாக உளவுத்துறை கண்காணித்து வந்துள்ளது. இந்தக் குழுவே டெல்லி தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வெடிபொருட்களை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த குழுவிடம் இருந்து கடந்த வாரம் 2900 கிலோ வெடி மருந்துகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அந்த பயங்கரவாத குழுவில் முக்கிய நபர் மருத்துவர் ஷகீலும் கைது செய்யப்பட்டார். ஷகீலின் கூட்டாளி தான் இந்த உமர் என்பதும், ஷகீல் கைதை அடுத்து தானும் கைது செய்யப்படலாம் என கணித்த உமர் இந்த தாக்குதல் சம்பவத்தை ஓர் தற்கொலைப்படை தாக்குதல் போன்று அரங்கேற்றியதாகவும் சொல்லப்படுகிறது. கார் வெடித்து சிதறிய பின் அதிலிருந்து கருகிய உடல் மீட்கப்பட்டது. டிஎனே பரிசோதனை மூலம் அந்த உடல் உமர் தானா என்பது உறுதிசெய்யப்படும் என காவல்துறையினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரில் உள்ள உமரின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் ஸ்லீப்பர் செல் தான் இந்த உமர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரின் பேரில் பாலகோட் வான்வழித் தாக்குதல்களுக்கு பழிதீர்க்கும் தாக்குதலாக இந்த தாக்குதல் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.மேலும் , 'பஹாவல்பூர் தாக்குதல்களின் போது நடந்த மசூத் அசாரின் குடும்பத்தினரைக் கொன்றதற்குப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.





















