Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரி
தர்மபுரியில் சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் கும்பளை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் ஆளில்லா வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை இயந்திரம் மூலம் கண்டறிந்துள்ளனர்..இந்நிலையில் அதிரடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், அந்த கும்பலை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
லலிதா என்ற இடைத்தரகர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிய வந்த பெண்மணி ஆகியோர் சம்பவ இடத்தில் சிக்கியுள்ளனர். இதில் தலா ரூ.13,000 வீதம் பெற்றுக் கொண்டு 4 பெண்களுக்கு, நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து, கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளது அம்பலமானது. இந்த முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக, கருக்கலைப்பு செய்ததால், கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் சாந்தி குற்றவாளிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் இந்தியாவில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.