Kushboo on Periyar: பெரியாருக்குக் காவி! கோழைகள் என கொந்தளித்த குஷ்பூ
Kushboo on Periyar: கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தந்தை பெரியார் படிப்பகம் உள்ளது. இங்கு திராவிடர் கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி பொடி தூவி செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். இது குறித்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு, “நேற்று கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். தந்தை பெரியார் பலராலும் போற்றப்படுபவர். அவரை நாம் மதிக்க வேண்டும். இந்த வெட்கக் கேடான செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அவர் மீது காவி வண்ணம் பூசுபவர்கள் கோழைகள்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.





















