Theni Special mittai story : கூட்டம் குவியும் மிட்டாய்க்கடை - இது தேனி Special..
அம்மாவுக்கு தெரியாம அப்பாவும் ,அப்பாவுக்கு தெரியாம அம்மாவும் குடுத்த பாக்கெட் மணி ஒரு ரூபாய், அத மறைச்சு வச்சு கடையில போயி தேன்மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், தேங்காய் பர்பி ,பஞ்சுமிட்டாய், மேஜிக் பாக்கு ,கள்ள மிட்டாய் இப்டி வாங்கி சாப்ட்ட நாட்கள இப்பயும் நம்மலாள மறக்க முடியாது. இப்ப இருக்க காலத்துல என்னதான் பை ஸ்டார் சாக்லேட்டும் , கிண்டர் ஜாய் சாக்லெட்டும் வாங்கி சாப்ட்டாலும் , இந்த 80S, 90S கிட்ஸ்களோட எழந்தபழ மிட்டாயோட கம்பெர்பன்னி பாக்கும்போது எழந்தபழத்துக்கு கொஞ்சம் மவுசு கூடுதல்ங்க. குழந்தைகளுக்கு இப்ப கிடைக்குற ஸ்னாக்ஸ் பெரும்பாலும் உடம்புக்கு கேடான பொருட்கள வாங்கி சாப்ட்றத நாம பாக்க முடியுது ஆனா 80S, 90Sல சின்ன குழந்தைங்க சாப்ட்ட ஒவ்வொரு சாக்லெட்டுக்கும் , விளையாட்டு பொருளுக்கும் ஒரு கதை இருக்கும்ங்க .அப்டி அந்த காலகட்டத்துல கெடச்ச மிட்டாய்களும் சரி , விளையாட்டு பொருட்களும் சரி அத இப்ப நெனச்சு பார்த்தா கூட அந்த அழகிய நினவுகளுக்கு எதுவுமே ஈடாகாதுனும் சொல்லலாம். குழந்தைகள் கூட விளையாடும் நினைவுகள் ரொம்பவே ஆழமானது அதுலயும் நல்ல நினைவுகள் நமக்குள்ள ஆழமா பதியுரது ரொம்பவே ஆரோக்கியமான ஒரு விசயம்தான். அப்படி நம்மளோட 80S, 90S காலகட்டங்கள்ள நம்மள நமக்கே நினைவூட்டுர விதமா நம்மளோட நினைவுகள ஞாபகபடுத்துராங்க ஒரு கடைல விக்குற 80S, 90S காலகட்டத்துல நாம வாங்கி சாப்ட மிட்டாய்களும் நாம வாங்கி விளையாண்ட விளையாட்டு பொருட்கள் மூலமும் அப்டி எங்க என்ன இருக்கு வாங்க பாக்கலாம்.