‘ADVANCED STROKE NETWORK’ பக்கவாத நோய் பயமா?அப்போலோவின் புதிய முயற்சி | Apollo Advanced Stroke Network
உலக பக்கவாத தினமான இன்று அப்போலோ மருத்துவமனை பக்கவாத நோய் பாதிப்பு குறித்து விரைவாக கண்டறியும் நவீன வசதி திட்டமாக " அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க் " திட்டத்த்தை அறிமுகப்படுத்தியுள்ளது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உலக பக்கவாத தினமான இன்று , அப்போலோ மருத்துவமனைகள் பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் " அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க் " பக்கவாத நோய் பாதிப்பு குறித்து விரைவாக கண்டறியும் நவீன வசதி மற்றும் உரிய சிகிச்சையை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ நெறிமுறை அடிப்படையில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 4 நொடிக்கு ஒருவருக்கு பக்கவாதம்
இளைய தலைமுறையினரிடம் பக்கவாத பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4 பேரில் ஒருவர் பக்கவாத பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.3 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை பாதிப்படைகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு 4 நொடிக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாத பாதிப்பு உள்ளது.
அப்பல்லோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க் , இதில் சென்னையின் நரம்பியல் மற்றும் நியூரோவாஸ்குலர் சிகிச்சையில் முன்னணி வகிக்கும் பல்துறை மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் , நியூரோ எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் பரமசிவம், மருத்துவர்கள் கண்ணன், விஜய் சங்கர், முத்துகனி, அருள்செல்வன், சதீஷ்குமார், ஶ்ரீனிவாசன் மற்றும் மூத்த நரம்பியல் ஆலோசகர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















