மேலும் அறிய

Nagarjuna convention demolition | தரைமட்டமான மண்டபம்! சோகத்தில் நாகர்ஜூனா! நடந்தது என்ன?

ஏரியை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டப் பட்டு நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் இருந்த மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவர் நடிகர் நாகர்ஜூனா. இவர் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாதில்  என் கன்வின்சன் என்கிற கட்டிடம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார். இந்த கட்டிடம் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று பெரிய மண்டபடங்களை கொண்டது. இந்த மூன்று மண்டபங்களுக்கான பார்க்கிங் வசதிகளும் உள்ளன. பல்வேறு திருமண நிகழ்ச்சிகள், அரசியல்  நிகழ்வுகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் இந்த கட்டிடத்தில் நடைபெற்று வந்தன. 
தற்போது இந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாதில் உள்ள மாதம்பூர் என்கிற பகுதியில் தம்மிடி குந்தா என்கிற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை  ஆக்கிரமித்து நாகருஜூனா இந்த கட்டிடத்தை கட்டியுள்ளதாக புகார் எழுந்தது.  இந்த கட்டிடத்தை இடித்து ஏரியை மறுசீரமைக்க கோரி ஹைதராபாத் மாநகராட்சியில் பலர் புகாரளித்திருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த மாநகராட்சி அதிகாரிகள் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை இடிக்க முடிவு செய்தார்கள். இன்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி காவல் துறையின் பலத்த பாதுகாப்போடு இயந்திர வாகணங்களைக் கொண்டு இந்த கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. மேலும் இந்த பகுதி வழியாக செல்லும் சாலைகளும் மூடப்பட்டன. 
சமீபத்தில் தொடங்கப்பட்ட ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் இயற்கை அரண்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை இந்த இடிக்கும் பணிகளை மேற்கொண்டு , சமீபத்தில் அமைக்கப்பட்ட இந்த முகமை தனது முதற்கட்ட பணியாக நாகர்ஜூனாவின் கட்டிடத்தை இடித்துள்ளது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் தனது கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “ என்னுடைய கட்டிடம் முழுக்க முழுக்க எனக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. எந்த வித அறிவிப்பும் இல்லாமல் அது இடிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த கட்டிடம் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது . ஆக்கிரமிப்பு நிலத்தில் இந்த கட்டிடம் இருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தால் நானே முன் நின்று அதை இடித்திருப்பேன். இது தொடர்பாக நீதி மன்றத்தில் தக்க இழப்பீடு கோருவேன் “ என்று அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget