Samantha Ruth Prabhu : நான் மட்டுமே காரணமில்லை... மனம் திறந்த சமந்தா
Samantha Ruth Prabhu : மன ஆரோக்கியம் தொடர்பான தனியார் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார் சமந்தா. அப்போது பேசிய அவர், மன ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், '' மன நலம் சார்ந்த பிரச்னையில் இருக்கும் போது மீண்டு வருவதற்கான உதவியை பெறுவதில் தடையோ, தயக்கமோ இருக்கக் கூடாது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை மன நல பிரச்னையில் இருந்து மீண்டு வர நண்பர்களும், மருத்துவர்களுமே உதவி செய்தனர். மனம் நலம் சார்ந்த பிரச்னையில் மருத்துவரை அணுகுவது மிகவும் சாதாரணமானது. உடல் நிலை பிரச்னை என்றால் எப்படி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கிறோமோ, அப்படித்தான் மன நல பிரச்னைக்கும். நம் மனம் காயமடைந்தால் மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்





















