Coimbatore Mayor Candidate: செந்தில்பாலாஜி டிக் அடிக்க போகும் கோவை மேயர் யார்?
Coimbatore Mayor Candidate: கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் இரண்டு முறை கூட்டணி கட்சிகளுக்கு திமுக மேயர் பதவியை வழங்கிய நிலையில், திமுக முதல் முறையாக நேரடியாக மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது. மேலும் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் முதல் திமுக மேயர் என்ற பெருமையை பெற திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு பெற்றுள்ள 22 வயது மாணவி நிவேதா சேனாதிபதி, முன்னாள் கவுன்சிலர்கள் இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு உள்ளிட்டோருக்கு மேயர் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.






















