Optical Illusion: கிச்சனில் ஒளிந்திருக்கும் எலி; கண்டுபிடிக்க 10 நொடிதான் அவகாசம்!
நம் மூளை ஒளிப் படங்களை, தகவல்களை எப்படி உள்வாங்கி, செயலாற்றுகிறது என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் இவை உதவுகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் உங்களின் மனதோடு விளையாடும் திறன் பெற்றவை. ஒரு விஷயத்தை எவ்வளவு ஆழமாக, துல்லியமாக கவனிக்கிறீர்கள் என்று சோதிக்கும் வல்லமை கொண்டவை.
நம் மூளை ஒளிப் படங்களை, தகவல்களை எப்படி உள்வாங்கி, செயலாற்றுகிறது என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் இவை உதவுகின்றன.
இந்த புதிர்கள் உங்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதோடு, மூளையை அதிக கிரியேட்டிவ் ஆக்குகின்றன. அடிக்கடி இத்தகைய புதிர் முடிச்சுகளை அவிழ்ப்பதன் மூலம், உங்களின் நினைவுத் திறனையும் வளர்க்கலாம்.
இதோ உங்களுக்காக ஒரு புதிர் ஓவியம். இதில் மறைந்திருக்கும் எலியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
துல்லியமான கண்கள் இருந்தால் 10 நொடியில் கண்டுபிடித்து விடலாம். முடியுமா?
ஓர் அழகிய இல்லம். கிச்சன் ஓவியம் வரையப்பட்டு இருக்கிறது. அதில், சமையல் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பழங்கள், காய்கறிகளும் இருக்கின்றன. கேஸ் அடுப்பு, தவா, டவல் ஆகியவையும் உள்ளன. அலமாரிகளில் பொருட்கள் அடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஓவியத்தில் ஓர் இடத்தில் எலி மறைந்திருக்கிறது.
அதை 10 நொடிகளில் கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்.
உங்களின் நேரம் தொடங்கிவிட்டது.. படத்தை கவனமாகப் பாருங்கள்.
கண்டுபிடித்துவிட்டீர்களா?
இதோ.. நேரம் முடியப் போகிறது..
முடிந்தே விட்டது..
எத்தனை பேர் எலியை சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?
சரியாக அடையாளம் காட்டியவர்களுக்கு வாழ்த்துகள்.
இல்லாதவர்களுக்கு இதோ பதில்..