மேகம் கருக்குது மழை வர பாக்குது.. மேகாலயா அழகை சுற்றிப் பார்க்கலாம் வாங்க
மனதில் கஷ்டங்கள் இருந்தாளும், கிராங்ஷூரி நீர்வீழ்ச்சி பார்த்ததும் கஷ்டம் பறந்துவிடும். உங்களுக்கு ஒரு ஷார்ட் அட்வென்ச்சர் செய்ய வேண்டுமென்றால் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்.
ஒழுகும் நீர், குறுகிய பாதைகள், சிறு துளைகள் நிறைந்த பாறைக்கு நடுவில் படுத்தபடியே செல்ல வேண்டியிருக்கும்.
Travel With ABP ; 'கோடைதான் கொடைக்கானலுக்கு சரியான காலம். என்று, சொல்லும் நபர்களுக்கு இடையில், குளிர் காலம்தான், முழு கொடைக்கானலை எஞ்சாய் பண்ண சரியான நேரம். என, சொல்பவர்களும் உண்டு. ஆமாம், ஆஃப் சீசன்களில் பெரிய அளவு கூட்டம் இருக்காது, எக்ஸ்ட்ரீம் குளிர அனுபவிக்க முடியும், சில இடங்களில் பணமும் குறைவாக இருக்கும் என்று வித்தியாசமா திங்க் பண்றவங்களுக்கு மேகாலயா ஒரு சிறப்பான இடம்தான்.
கோடை விடுமுறை முடிந்து பின்னரும், மனதை லேசாக்க டூர் பிளான் பண்ணும் நபர்களுக்கு தான் இந்த கட்டுரை.
டாவ்கி நதி
டாவ்கி நதி தூய்மையான, தெளிந்த நதி. இது பங்களாதேஷ் பார்டரில் அமைந்துள்ளது. மழைக்காலம் தவிர்த்து எப்போது சென்றாலும் நதி கண்ணாடிபோல் தெளிவாக இருக்கும். இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்று. செல்போன்களை ஒதுக்கிவிட்டு என் அழகை ரசித்துப் பார் என்று சொல்லுவதுபோல் இருக்கும். அழகும், அமைதியும் மனதை லேசாக்கிவிடும். இங்கு படகு சவாரியும் செல்லமுடியும். ரூ.200 முதல் ரூ.500 வரைக்கும் டிக்கெட் உண்டு.
ரூட் பிரிட்ஜ் - மவ்லின்னாங் கிராமம்
இரண்டாவதுதாக ரூட் பிரிட்ஜ். ரூட் பிரிட்ஜ் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக காணப்படுபவை, பெரும்பாலும் ரப்பர் மர வேர்களை இணைத்து பாலமாக அமைத்திருப்பார்கள். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அந்த வேர்கள் உயிர்ப்புடன் இருக்கும். இந்த இடத்தை ரசித்து முடித்து விட்டு இந்தியாவின் தூய்மையான கிராமம் (Mawlynnong) மவ்லின்னாங் கிராமம் செல்லாம். அங்கு கிராமத்துக்குள் செல்ல நுழைவுக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் என்று எல்லாம் உண்டு. கிராமத்துக்குள் சென்றால் உண்மைய பரிசுத்தத்தை உணரலாம்.
ஒரு கிராமம் திட்ட மிட்டு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு மவ்லின்னாங் ஒரு உதாரணம். செல்ஃபி, ரீல்ஸ் விரும்பிகளுக்கு சொர்க்கம். தங்களது கனவு கிராமம் என்று உணரவைக்கும். சூழல் மட்டுமில்லாது அங்கு வசிக்கும் மக்களும் வாஞ்சையாக வரவேற்பார்கள். அதனால் அங்கு தங்க ஆசைப் பட்டாலும், அதற்கும் இடம் உண்டு. விருப்பமான ஹோம் ஸ்டேயை புக் செய்து கொள்ளலாம்.
கிராங்ஷூரி நீர்வீழ்ச்சி - கார்டன் அப் கேவிஸ்
அதே போல் கார்டன் அப் கேவிஸ் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். குழிப்பணியார சட்டியில் இருக்கும் குழியைப் போல் அழகாக தெரியும். மெகா சைஸ் பள்ளத்தாக்குகள் நிறைந்த குகைகள் தான் இது. அழகிய நீர்வெழுச்சிகள் ஏதோ ஹாலிவுட் செட் போன்று இருக்கும். அங்கு ஒரு சிறு ஊற்று இருக்கும், அதில் முழுக்க, முழுக்க சுத்தமான நீர் தான் வரும், என்று அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அரசும் உறுதிப் படுத்துகிறது. கண்களை ஆஸ்வாசப்படுத்த காத்திருக்கும் அடுத்த இடம் கிராங்ஷூரி நீர்வீழ்ச்சி. தூரத்தில் இருந்து பார்த்தாலே நம்மை ஆச்சரியப்படுத்தும். நெருங்க, நெருங்க சிலிர்ப்பு அந்த நீர்விழ்ச்சியின் ஊதா நிறம் என்னவோ செய்யும். குளிருக்கு இதமா நீர்வீழ்ச்சி கரையோரம் கோழிப் பஞ்சாரம் போன்று, டென்ட் அமைத்து தங்கலாம். அதற்கான வசதியும் உண்டு. ஆனால் அங்கு வரும் நபர்களை பொருந்தே விலைவாசி மாறுபடும்.
நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி
அடுத்ததாக உலக புகழ் பெற்ற நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி. நோஹ்கலிகை ஒரு காட்டுக்குள் மிக உயரத்தில் இருந்து விழுகிறது. அந்த அருவி அது அமைந்திருக்கும் சூழல் பிரமாண்டமாக இருக்கும். நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியானது, சிறிய பீடபூமியின் உச்சியில் சேகரிக்கப்படும் மழைநீரால் நிறைந்திருக்கும். வறண்ட காலங்களில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் ஆற்றலைக் குறைக்கிறது. நீர்வீழ்ச்சிக்குக் கீழே பச்சை நிறத்தில் அசாதாரண நிழலுடன் கூடிய நீர்நிலை குளம் உள்ளது. ஒருவேளை பனிமூட்டம் அதிகமாக இருந்தால் நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியைக் காண்பது சிரமமாகிவிடும். நம்மூர் கொடைக்கானல் பில்லர் ராக் மாதிரி.
மவ்ஸ்மாய் குகை
இயற்கையின் தூரிகையால் வரையப்பட்ட மவ்ஸ்மாய் குகை உண்மைகள் ஒரு நேச்சுரல் த்ரில்லிங் அனுபவம். குகையின் ஒரு புறம் சென்று மறுபுறம் வரவேண்டும், விளக்குகள் கிடையாது. லேசா மிளிரும் ஒளியை வைத்தே கடந்து செல்லமுடியும். செயற்கையான செல்போன் லைட், கேமரா பிளாஷ்கும் அனுமதி இல்லை. அங்கங்கே ஒழுகும் நீர், குறுகிய பாதைகள், சிறு துளைகள் நிறைந்த பாறைக்கு நடுவில் படுத்தபடியே செல்ல வேண்டியிருக்கும். ஒரே அட்வெஞ்சர் மோட்தான். வெளியே வரும் பொது பியர் க்ரில்ஸ் போல அனுபவத்தை உண்டாக்கும்.
ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சி
நோஹ்ஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சி அதாவது ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சிகள் அல்லது மவ்ஸ்மாய் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. செவன் சிஸ்டேர்ஸ் இந்திய மாநிலமான மேகாலயாவில் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்ஸ்மாய் கிராமத்திற்கு தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஏழு பிரிவுகளாக அமைத்திருக்கும் நீர்வீழ்ச்சியாகும். நீர் 315 மீட்டர் (1,033 அடி) உயரத்தில் இருந்து விழுகிறது. மேலும் சராசரியாக 70 மீட்டர் (230 அடி) அகலம் கொண்டது. இது இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும் . இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் பார்க்க பிரமாண்டமாக இருக்கும். ஒவ்வொரு முறை சூரியக் கதிர்கள் நீர்வீழ்ச்சியின் மீது விழும்போது தாவும் மீனும் அழகாக தெரியும். அதை பார்க்க தவம் செய்திருக்க வேண்டும். காற்றடித்தால் அந்த அருவியின் சாரலில் நனைந்தபடி ரசிப்பது தனி ஸ்நேகம்.
ஷார்ட் அட்வென்ச்சர்
வெய் சாவ்டாங் (Wei Sawdong) நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியை விட அதற்க்கு செல்லும் பாதை மிக அருமையானது. ஒரு சிறிய சாகச பயணம். மனதில் கஷ்டங்கள் இருந்தாளும், நீர்வீழ்ச்சியை பார்த்ததும் கஷ்டம் பறந்துவிடும். உங்களுக்கு ஒரு ஷார்ட் அட்வென்ச்சர் செய்ய வேண்டுமேயென்றால் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம். இதில் பல இடங்கள் சிரபுஞ்சியில் அமைந்திருப்பதால் உங்களுக்கு சிறப்பு சலுகையாக மலை சாரல்கள் தூறிக்கொண்டே இருக்கும் என்பது அது உங்களுக்கு எக்ஸ்ட்ரா எஞ்சாய்மெண்ட்.