ரயில் பயணிகளுக்கு சூப்பர் சலுகை! டிக்கெட் கட்டணத்தில் 6% வரை தள்ளுபடி! RailOne செயலி மூலம் உடனே பயன் பெறுங்கள்!
ரயில் ஒன் செயலி வாயிலாக அன்ரிசர்வடு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது இந்திய ரயில்வே. அந்த வகையில் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 6% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இன்று தொடங்கி 6 மாதங்களுக்கு அதாவது ஜூலை மாதம் 14ஆம் தேதி வரை இந்த டிக்கெட் சலுகை கிடைக்கும்.
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். குறைந்த கட்டணம் தான் மக்கள் ரயில் பயணங்களை விரும்ப முக்கிய காரணம். இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த ஒரு சலுகையால் ரயில் கட்டணம் இன்னும் குறைய போகிறது. ஆம், RailOne செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி என அறிவித்துள்ளது.ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு செயலி, ரயில் லைவ் ஸ்டேட்டஸ் பரிசோதிக்க ஒரு செயலி, உணவு ஆர்டர் செய்வது, புகார் பதிவு செய்வது என தனித்தனி செயலிகளை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து இந்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செயலி தான் RailOne செயலி.
இந்த ரயில் ஒன் செயலி வாயிலாக அன்ரிசர்வடு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை இன்று தொடங்கி ஆறு மாதங்களுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் பயணிகள் ரயில் ஒன் செயலியின் மூலம் அன்ரிசர்வ்டு ஜெனரல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீத தள்ளுபடி கிடைக்கும்.எனவே ரயில் ஒன் செயலியில் R wallet மட்டும் இல்லாமல் யுபிஐ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேமென்ட்களை பயன்படுத்தக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் 3% தள்ளுபடி கிடைக்கும். ஏற்கனவே R wallet பயன்படுத்துவோருக்கு மட்டுமே 3% கேஷ் பேக் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து கிடைக்கும் இது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் பேமண்டுகளுக்கு மூன்று சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.
எனவே ரயில் ஒன் செயலி வாயிலாக ஒரு பயணி R wallet பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் 6 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி ரயில் ஒன் செயலி வாயிலாக மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.பயணிகள் பிளே ஸ்டோர் வாயிலாக ரயில்ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து மொபைல் நம்பரை உள்ளிட்டு லாகின் செய்து கொள்ள வேண்டும். இதனை அடுத்து எம்-பின் செட் செய்து கொண்டால் போதும் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மக்களிடம் ரயில் ஒன் செயலியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.





















