மேலும் அறிய

X Twitter Chat: சாட் ஆப்ஷனை அப்க்ரேட் செய்த ட்விட்டர்.. வீடியோ, ஆடியோ கால் & ஃபைல் ஷேரும் செய்யலாம்

X Twitter Chat: எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் அல்லது ட்விட்டர் செயலியில், சாட் வசதி மேம்படுத்தப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

X Twitter Chat: ட்விட்டர் செயலியில் மேம்படுத்தப்பட்ட சாட் வசதியானது முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் வெப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ட்விட்டர் சாட் ஆப்ஷன் அப்க்ரேட்

எக்ஸ் அல்லது ட்விட்டர் செயலியில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த வசதி தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நேரடியாக குறுந்தகவலை (Direct Message) அனுப்பு வசதியானது சாட் (Chat) அம்சமாக மாற்றப்படுகிறது. இந்த அப்க்ரேட் மூலம் பிரதான குறுந்தகவல் பரிமாற்ற செயலிகளை போலவே பல வசதிகள் எக்ஸ் அல்லது ட்விட்டர் செயலியில் இணைக்கப்படுகிறது. 

புதிய வசதிகள் என்ன?

அதில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ், ஆவணங்களை பகிர்ந்து கொள்வது, அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்வது மற்றும் டெலிட் செய்வது போன்ற அம்சங்களும் அடங்கும். பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. அனுப்பிய குறுஞ்செய்தியை ஒருமுறை படித்த பிறகு அழிய செய்வது, ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்படுவதை தடுப்பது, யாரேனும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடிந்தால் அது தொடர்பாக நோடிஃபிகேஷன் பெறுவது போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் ஆண்ட்ராய்டில் அறிமுகம்:

சோதனை முயற்சியாகவும், முதற்கட்டமாகவும் அப்க்ரேட் செய்யப்பட்ட சாட் வசதியானது, iOS மற்றும் வெப் எக்ஸ் அல்லது ட்விட்டர் பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ட்விட்டர் செயலியிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். ஆடியோ குறுந்தகவல்களை அனுப்புவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வாட்ஸ்-அப்பில் இருப்பதை போன்றே நண்பர்களையோ அல்லது சக ஊழியர்களையோ சேர்த்து குழுக்களையும் உருவாக்கி, பாதுகாப்பாக கலந்துரையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்னை தீர்ந்ததா?

குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான இந்த அம்சமானது ஏற்கனவே கடந்த மே மாதத்தில் எக்ஸ் அல்லது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக தற்காலிகமாக இந்த வசதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வெளியாகியுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, முன்பு இருந்த பிரச்னைகள் நிவர்த்தி செய்யப்பட்டதை உணர்த்துகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
எவ்ளோ அடிச்சும் நோ யூஸ்! ஒரே நாளில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தோற்ற இந்தியா! பவுலிங் படுமோசம்
எவ்ளோ அடிச்சும் நோ யூஸ்! ஒரே நாளில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தோற்ற இந்தியா! பவுலிங் படுமோசம்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Embed widget