மேலும் அறிய

Whatsapp Update: கீ-போர்டையே ஸ்க்ரால் செய்யலாம்.. எமோஜி பாரில் மாற்றம் வாட்ஸ்-அப் தந்த அப்டேட்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களின் அணுகலை எளிதாக்கும் நோக்கில், மேலும் இரண்டு அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களின் அணுகலை எளிதாக்கும் நோக்கில், மேலும் இரண்டு அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

குவியும் அப்டேட்கள்:

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தான், சாட் செய்வதையும், நகைச்சுவையாக உரையாடுவதையும் மேம்படுத்தும் வகையில்,  இரண்டு புதிய அப்டேட்களை வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்கியுள்ளது.

ரி-டிசைண்ட் கீ போர்ட்:

புதிய ப்டேட்டின்படி, வாட்ஸ்-அப் கீபோர்டை பயனாளர்கள் மேல்நோக்கி ஸ்க்ரால் செய்து கொள்ளலாம். இதனால், டைப் செய்யும்போது பயனாளர்களுக்கு கீ-போர்ட் மீது சற்று விரிவான பார்வை கிடைக்கு. இது வேகமாகவும், பிழை இன்றியும் டைப் செய்ய உதவும். அதேபோன்று, வழக்கமாக வாட்ஸ்-அப் கீபோர்டில் ஜிப் மற்றும் எமோஜிக்கான டேப்ஸ்கள் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும். புதிய அப்டேட்டின்படி, அந்த டேப்ஸ்கள் இனி கீ-போர்டின் மேல் பகுதியில் வழங்கப்படும். இதன் மூலம் வேகமாக டைப் செய்யும்போதே, எளிதாக ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்களை அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி..!

புதிய அப்டேட்கள் ஆனது சோதனை முறையில் தற்போது சில பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.  இதுதொடர்பான தகவலின்படி,  புதிய கீபோர்டு ஆண்ட்ராய்ட் போன்களில் 2.23.12.19 வெர்ஷனிலும்,  ஐபோன் பயனர்களுக்கு  இந்த அம்சம் iOS பீட்டா பதிப்பு 23.12.0.70 என்ற வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த புதிய அம்சங்கள் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது.

தரம் குறையாத புகைப்படங்கள்:

வாட்ஸ்-அப் செயலியில் அண்மையில் வழங்கப்பட்ட புதிய அப்டேட் மூலம் புகைப்படத்தின் உண்மையான தரம் குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர முடியும். அதன்படி, drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் (HD) ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் தரம் குறையாமல் உறுதி செய்யலாம். STANDARD QUALITY & HD QUALITY என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, பயனாளர்கள்  STANDARD QUALITY எனும் ஆப்ஷனை ஆன் செய்து இருக்க வேண்டும்.

யாருக்கு இந்த அப்டேட் கிடைக்கும்?

ஆண்ட்ராய்டு 2.23.12.13க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும், ஐஓஎஸ் 23.11.0.76 க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும் இந்த புதிய அம்சம் கிடைக்கிறது. வாட்ஸ்-அப் குழுமம் புதிய அம்சத்தை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. எனவே, இந்த புதிய அம்சம் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கப்பெற சிறிது காலம் ஆகும் என கருதப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget