மேலும் அறிய

திருச்சியில் என்.ஐ.டி கல்லூரி அறிமுகம் செய்த புதிய வசதிகளுடன் நோயாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின்  இதயத்துடிப்பின் அளவு,  மருந்து உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை தகவல் கொடுக்கும் விதமாக வடிவமைக்கபட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் (wearable Device) குறித்த 5 நாள் பயிலரங்கு நடைபெற்று வருகிறது. திருச்சி (NIT) தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவ கருவிகள் தொடர்பாக புதிய தொழில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  இதன் முக்கிய அம்சமாக  திருச்சி என்.ஐ.டி கல்லூரி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் மருத்துவ அணிகலன் கருவிகள் தொடர்பான செயற்கை நுண்ணறிவு திறன் (AI) குறித்தும் எதிர்கால பயன்பாடுகள், தரவு சேமிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள், புதிய நுணுக்கங்கள் குறித்து மாணவர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த புரிந்துணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  என்ஐடி இயக்குனர் அகிலா மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலா ஸ்ரீ ராகவன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் இது குறித்து என்.டி.ஐ இயக்குனர் அகிலா செய்தியாளர்களிடம் கூறுகையில், இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு தொழில்துறையில் எந்தவிதமான மருத்துவ அணிகலன் கருவி உள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். 


திருச்சியில் என்.ஐ.டி கல்லூரி அறிமுகம் செய்த புதிய வசதிகளுடன் நோயாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்

மேலும், மாணவர்களுக்கு தொழில் துறையுடன் இணைந்து அனுபவக் கல்வியினை கொடுக்க வேண்டும், மேலும் 
மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போது, தொழில் நிறுவனமானது அதற்குண்டான வாய்ப்பை வழங்கும் நிலையில், மாணவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தாமல் அதற்கான காலங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் கல்வியை தொடரலாம் என தேசிய கல்வி கொள்கை அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.டி மாணவர்களுக்காக இதுவரை தொழில் நிறுவனங்களுடன் 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார்.


திருச்சியில் என்.ஐ.டி கல்லூரி அறிமுகம் செய்த புதிய வசதிகளுடன் நோயாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்

இதனைத் தொடர்ந்து டேட்டா நெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனம் தங்களது ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின்  இதயத்துடிப்பின் அளவு, மருந்து உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை நோயாளியின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்கள் தவறி கீழே விழுந்தாலோ, அல்லது வீட்டில் இருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சென்றாலோ அதனை sos மூலம் பதியப்பட்ட குறிப்பிட்ட மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் விதமாக இந்த ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை டேட்டா நெட் டிப்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் அலுவலர்கள் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் சிவகுமாரன் ஸ்ரீ மூர்த்தி பிருந்தா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் டேட்டாநெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Embed widget