மேலும் அறிய

இனி தெரியாத நம்பரிலிருந்து போன் வந்தா பயப்படாதீங்க... ட்ராய் எடுக்கப்போகும் அதிரடி அப்டேட்...!

வாடிக்கையாளர்களுக்கான தொலைபேசி அழைப்புகளை, இனி அழைப்பவரின் பெயருடன் திரையில் காண்பிக்கும் புதிய திட்டத்தை கொண்டு வர, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

தொலைபேசிகள் மனித குலத்தின் ஆறாம் விரலாய் மாறிப்போக, அவை இன்றி அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாகவும் செல்போன் உருவெடுத்துள்ளது. என்னதான் அவசர தேவைக்காவும், தகவலை பரிமாறிக்கொள்வதற்காகவும் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக மேம்பாட்டிலும் அது பெரும்பங்காற்றி வருகிறது. தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, செல்போன் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது சேவை குறித்து எடுத்துரைத்து வணிகம் தொடர்பான பெரும் ஒப்பந்தங்களையும் எளிமையில் முடிக்க உதவுகின்றன.

 

செல்போன் மூலமான இந்த வியாபார யுக்தி சாதகமானதாக கருதப்பட்டாலும், பல நேரங்களில் அநாவசிய தொந்தரவாகவே கருதப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் சேவை வேண்டாம் என கூறிவிட்டாலும், மீண்டும் மீண்டும் வாடிக்கையாளரை தொடர்புகொண்டு தொந்தரவு செய்வது தற்போது அதிகரித்துள்ளது. அந்த எண்ணை பிளாக் செய்தால் புதிய எண்ணில் இருந்து வாடிக்கையாளரை தொடர்பு கொள்வதும்  தொடர்கதையாக உள்ளது. வாடிக்கையாளரின் நிலை மற்றும் அவர் எந்தமாதிரியான சூழலில் உள்ளார் என்பதை சற்றும் அறியாமல், கஸ்டர்மர் கேர் தரப்பில் இருந்து அழைப்புகள் குவிகின்றன.


இனி தெரியாத நம்பரிலிருந்து போன் வந்தா பயப்படாதீங்க... ட்ராய் எடுக்கப்போகும் அதிரடி அப்டேட்...!

                                                                  courtesy: indian television

true caller போன்ற செயலிகளை கொண்டு, செல்போனில் தங்களை அழைப்பது யார் என பயனாளர்கள் தற்போது அறிந்து வருகின்றனர். இதனால், அநாவசியமான அழைப்புகளை ஓரளவிற்கு தவிர்க்க முடிகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்ததை அடுத்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும், unknown number என்ற பெயரில் வரும் அழைப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.  

 

இந்நிலையில் தான், பயனாளருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை, அழைப்பு மேற்கொள்ளும் நபரின் பெயருடன் செல்போன் திரையில் காண்பிக்க வேண்டும், என்ற விதிமுறையை கொண்டு வர, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட சிம் கார்டை வாங்குவதற்காக வழங்கப்பட்ட KYC தரவுகளின் அடிப்படையிலான, விவரங்களை திரையில் காட்ட வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கும், இதே நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயனாளர்கள் சேமிக்காத எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலும், மறுமுனையில் இருப்பவர்களின் விவரங்களை அறியும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. true caller போன்ற செயலிகள் மூலம் தற்போது அந்த விவரங்கள் அறியப்பட்டாலும், அந்த செயலியில் பதிவிடப்படும் பயனாளர்களின் தரவுகள் 100% பாதுகாப்பானது என உறுதி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக புதிய நடவடிக்கையை தொலைதொடர்பு ஒழுங்குறை ஆணையம் முன்னெடுத்துள்ளது.

 

பயனாளர்களின் அனுமதி இன்றி அவர்களின் விவரங்களை மற்றவர்களின் திரையை காண்பிக்க முடியாது என சில தொலைதொடர்பு நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தனிமனித உரிமை மீறல் ஆக மாறக்கூடும் எனவும் விளக்கமளித்துள்ளன. இதுதொடர்பாக உரிய ஆலோசனைகளை நடத்தி தீர்வு காண, டிராய் அமைப்பு சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வருவதன் மூலம், true caller போன்ற செயலிகளின் தேவை இருக்காது. மேலும், எளிமையாகவே அநாவசியமான அழைப்புகளை பொதுமக்கள் தவிர்க்கலாம். 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget