மேலும் அறிய

ஆப்ஸ் மூலம் கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு! ஐபோனின் தனியுரிமையை ஏற்காத பயனாளர்கள்!

9to5Mac இன் அறிக்கையின்படி, அதிகமான ஐபோன் பயனர்கள் செயலிகளால் கண்காணிக்கப்படும் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரபல ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களின் தனி உரிமையை பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டு டிரான்ஸ்பரன்ஸி அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.  இது ஃபேஸ்புக் , வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு பிடிக்கவில்லை என்ற போதிலும் இழுபறியிலேயே வைத்திருந்த தங்கள் முடிவுகளை இறுதியாக மாற்றிக்கொண்டது. இதன் மூலம் பயனாளர்களின் விருப்பம் இல்லாமல் , அவர்களின் தனிப்பட்ட தகவல்களை எடுத்துக்கொள்ள செயலி நிறுவனங்களுக்கு உரிமை இல்லை . இந்த நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஐபோன் பயனாளர்கள் அதிகமானோர்  ஐபோன் அறிவித்த தனியுரிமை பாதுகாப்பில் கவனம் கொள்ளவில்லை என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்

9to5Mac இன் அறிக்கையின்படி, அதிகமான ஐபோன் பயனர்கள் செயலிகளால் கண்காணிக்கப்படும் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆராய்ச்சி நிறுவனமான அட்ஜஸ்ட் வெளியிட்டுள்ளது. ஆப்ஸ் மூலம் கண்காணிக்கப்படும் ஐபோன் பயனர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 25% ஆக உயர்ந்துள்ளது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கிட்டத்தட்ட  9 % அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மொபைல் கேமிங்தான் என கூறப்படுகிறது.

கேம்களை விளையாடும் பயனர்கள் டெவலப்பர்கள் தங்கள் தனிப்பட்ட தரவை சேகரிக்க அனுமதித்துள்ளனர். சுமார் 30% ஐபோன் பயனாளர்கள் ,  கேம் டெவலப்பர்கள் தங்கள் தரவைச் சேகரிக்க அனுமதித்துள்ளனர்.  இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சில பிரபலமான கேம்கLஐ பதிவிறக்கம் செய்து விளையாடும் 75% பயனர்கள் தங்கள் தரவை கண்காணிக்கும் விருப்பத்தை அனுமதித்துள்ளனர் என்பதுதான்.

என்னதான் பயனாளர்கள் அதிகரித்திருந்தாலும், அதன் ஒப்பீட்டு விகிதத்தை கணக்கிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது கடந்த முறை பல்வேறு செயலிகளால் கண்காணிக்கப்பட்ட பயனாளார்கள் இம்முறை கேமிங் மூலம்தான் அதற்கான ஒப்புதலை அளித்திருக்கின்றனர். மொபைல் கேமிங் தற்போது சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே ஐபோனின் தனியுரிமையை ஏற்காத பயனாளர்களின் எண்ணிகையும் அதிகரிக்கும் என்பதே ஆய்வு முடிவின் கருத்தாகும். ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு பயனாளர்களின் அனுமதி இல்லாமல் , செயலி நிறுவனங்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க கூடாது என்றும் ,  இந்த புதிய விதிக்கு உட்படாத செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
US Iran War: ''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Embed widget