மேலும் அறிய

'Joker' Malware : பணத்தை திருடும் வைரஸ்! இந்த 3 செயலியும் டேஞ்சர்! ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்! உடனே செக் பண்ணுங்க..

தகவல் திருட்டு நடப்பது ஒரு புறம் இருந்தாலும் , அவர்களின் மொபைல்போன்களையும் செயலிழக்க செய்யும் அபாயம் உள்ளது. 

ஆண்ட்ராய்டு போனை மிரட்டும் ஜோக்கர் வைரஸ் தொடர்ந்து அச்சமூட்டி வருகிறது. பல செயலிகளில் ஜோக்கர் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும் அடுத்தடுத்து பல செயலிகள் இந்த வைரசால் பாதிக்கப்படுவது கூகுளுக்கே பெரிய தலைவலியாக உள்ளது. ஜோக்கர் வைரஸ் ஊடுவிய செயலியை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கே தெரியாமல் , தகவல் திருட்டு நடப்பது ஒரு புறம் இருந்தாலும் , அவர்களின் மொபைல்போன்களையும் செயலிழக்க செய்யும் அபாயம் உள்ளது. 

ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட 3 ஆண்ட்ராய்ட் ஆப்களை அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள். இந்த ஆப்கள் செல்போனில் இருந்தால் மால்வேர் தாக்கப்பட்டு உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாமென கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக போனில் உள்ள பண பரிவர்த்தனை செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உங்களது பணத்தை திருட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Joker' Malware : பணத்தை திருடும் வைரஸ்! இந்த 3 செயலியும் டேஞ்சர்! ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்! உடனே செக் பண்ணுங்க..

நீக்கப்பட்ட 3 ஆப்கள் எவை? 

Style Message, Blood Pressure App, Camera PDF Scanner ஆகிய 3 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன.இந்த 3 மெசேஜ்களையும் இனி டவுன்லோடு செய்ய முடியாது என்றும், ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்திருந்தால் உடனடியாக பதிவுநீக்கம் செய்ய வேண்டுமென கூகுள் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஜோக்கர் வைரஸ்..

ஜோக்கர் வைரஸ் முதல் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கூகுள் 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜோக்கர் வைரஸுடன் தங்கள் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருவதாக குறிப்பிட்டிருந்தது. ஜோக்கர் வைரஸ் தாக்கிய நரின்  மொபைலுக்கு வரும் SMS,அவரின்  contact list, மொபைலின் device info, வங்கிகள் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளின் OTP உள்ளிட்ட அனைத்தும் ஹேக்கர் கைக்கு சென்றுவிடும். இதனால் தான் ஜோக்கர் வைரஸை கண்டு கூகுளும், ஸ்மார்ட்போன் பயனாளர்களும் அலறுகின்றனர்.

முன்னதாக, 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்ட colour message என்ற செயலியும் ஜோக்கர் செயலியால் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த செயலியை கூகுள் நீக்கியது. ஏற்கெனவே டவுன்லோட் செய்த பயனாளர்கள் உடனடியாக அந்த செயலியை செல்போனில் இருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Max Price Drops: ஐபோன் 17 வாங்கப் போறீங்களா.? ப்ரோ மேக்ஸ் ரூ.10,000-க்கு மேல கம்மியா கிடைக்குது; எங்க தெரியுமா.?
ஐபோன் 17 வாங்கப் போறீங்களா.? ப்ரோ மேக்ஸ் ரூ.10,000-க்கு மேல கம்மியா கிடைக்குது; எங்க தெரியுமா.?
Upcoming Smartphones in July: ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
iPhone 17 Discounts: சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
iPhone 17 Discount: மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Best Selling SUV: விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
MK STALIN : ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Gold and silver rate today : அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
Embed widget