மேலும் அறிய

Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்

பாமகவில் தந்தை - மகன் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்த நிலையில், ராமதாஸை நம்பி பயணித்தவர்களின் நிலை கேள்வியை எழுப்பியுள்ளது. ராமாதாஸ் பல கோடியை இழந்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாமகவின் அரசியல் வரலாறு

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டி போடும் வகையில் பாமக கட்சியானது உருவெடுத்தது. வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கட்சியாகவும் பாமக திகழ்ந்தது. பாமகவின் உதவி இல்லாமல் வட மாவட்டங்களில் எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாத நிலையானது இருந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணி மாறி மாறி போட்டியிட்டதால் பாமக மீதான நம்பிக்கையை அப்பகுதி மக்கள் இழக்க தொடங்கினர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார போட்டியால் பாமகவானது இரண்டாக பிளவுப்பட்டது.

ராமதாஸ் - அன்புமணி மோதல்

ஒரு கட்டத்தில் அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய ராமதாஸ், அடுக்கடுக்கான புகார்களை அன்புமணி மீது தெரிவித்தார். இதற்கு அன்புமணியோ ராமதாஸ்க்கு வயதாகிவிட்டதால் என்ன பேசுவது என தெரியாத குழந்தை போல மாறிவிட்டதாகவும கூறியிருந்தார். ஒரு கட்டத்தில் பாமகவின் தலைவர் நான் என அறிவித்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் நீக்க தனது ஆதரவாளர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். இதனால் இரு தரப்பும் பல இடங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல இடங்களில் புகார் மனுக்கள் சென்ற நிலையில், பாமக தலைவர் அன்புமணி தான் என இரு தரப்பும் உறுதி செய்தது.

தேர்தலில் ராமதாஸ் அணி தோல்வி

இதனையடுத்து அன்புமணியை வீழ்த்த வேண்டும் என ராமதாஸ் சட்டமன்ற தேர்தலில் தனி அணியாக செயல்பட்டார். அன்புமணி நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தினார். இதனால் பல இடங்களில் பாமகவின் வெற்றியானது பாதிக்கப்பட்டது. மேலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ராமதாஸ் ஆதரவாளர்கள் பல கோடி ரூபாய் செலவும் செய்தனர். ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியே பரிசாக கிடைத்தது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸை அன்புமணி தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது இருவரும் கட்டியணைத்து கொண்டு கண்ணீர் விட்டனர். இதனையடுத்து அன்புமணி குடும்பத்தினருக்கு சைவ, அசைவ விருந்து அளித்து குடும்பத்தினருடன் ராமதாஸ் மகிழ்ந்தார்.

இணைந்த அன்புமணி- ராமதாஸ்

இந்த நிலையில் ராமதாஸை நம்பி அன்புமணியை பகைத்து கொண்டவர்களின் நிலைதான் கேள்விக்குறியாகியுள்ளது. அந்த வகையில் ராமாதாஸின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜி.கே.மணி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். அடுத்தாக பாமக எம்எல்ஏவாக இருந்த அருளும் ராமதாஸை நம்பி பல கோடி ரூபாய் இழந்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலம் அருள் கூறுகையில், ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசியை மனதார வரவேற்கிறோம். இந்த சந்திப்பு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றிருந்தால் 15க்கும் மேற்பட்ட இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவியை பெற்றிருக்கலாம். 

நட்டாற்றில் தவிக்கும் ராமதாஸ் ஆதரவாளர்கள்

அதே நேரம் ராமதாஸை நம்பி பயணித்ததால் பல கோடியை இழந்துள்ளோம். சொத்தையெல்லாம் விற்று, பல கோடி ரூபாய் கடன்காரர்களாக மாறியிருக்க மாட்டார்கள். இந்த வேதனை, வருத்தம், வலி எங்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது என்ன செய்வது.? யாருடன் பயணிப்பது என தெரியாமல் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் தவிப்பதாகவும் விரைவில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என அருள் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Dams In Karnataka:
Dams In Karnataka: "கேஆர்எஸ் முதல் கபினி வரை.." காவிரி குறுக்கே கர்நாடக கட்டிய அணைகள் எத்தனை?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget