WhatsApp Ban: வாட்ஸ் ஆப்க்கு தடை.? உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!
WhatsApp Ban: இந்தியாவில் வாட்ஸ் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. யார் தடை கோரி வழக்கு தொடுத்தது?
நாட்டில் உள்ள அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்படவில்லை என்றால், வாட்ஸ்அப்பின் செயல்பாட்டையும் பயன்படுத்துவதையும் தடை செய்ய, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
வாட்சப் செயலி:
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் , வாட்ஸப் செயலியானது பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு நாட்டில் இருந்து , மற்றொரு நாட்டில் உள்ளவர்களுக்கு கூட குறுஞ்செய்தி அனுப்புதல், புகைப்படம் அனுப்புதல், வீடியோ கால் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்கின்றன. இதனால், பலரும் வாட்ஸ் செயலியை பயன்படுத்துகின்றன. ஆனால், அவ்வப்போது வாட்ஸப் செயலி மீதான குற்றச்சாட்டுகள் வரும், அதில் பயனர்களின் தனியுரிமை மீறப்படுகிறது என்றும், பயனர்களின் தகவலகள் சேமிக்கப்பட்டு, தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது என்றும் தகவல் வரும். ஆனால் , இந்த வாட்சப் நிறுவனம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
தடை கோரி மனு:
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஓமனகுட்டன் கேஜி என்பவர், வாட்ஸப் செயலியை தடைசெய்ய கோரி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021க்கு இணங்க, வாட்சப் செயலியானது, செயல்படவில்லை எனவும், பயனர்களின் தனியுரிமை கொள்கையை மீறி, பகிரும் தகவல்களை சேமிப்பதாகவும், இதை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் ஓமனகுட்டன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் மனுவை விசாரிக்க எடுத்து கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு கூறியது.
இதற்கு முன்பு அரசின் உத்தரவுகளை ஏற்க மறுத்தால் வாட்ஸ்அப்பை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.