மேலும் அறிய

Reliance Jio: அதிவேக இண்டர்நெட் சேவை; 5.5G உடன் கிடைக்கும் ஒன்ப்ளஸ் 13 சீரிஸ் - ஜியோ அதிரடி!

Reliance Jio: ஜியோ நிறுவனம் ஒன்ப்ளஸ் 13 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்ஃபோனில் 5.5G நெட்வோர்க் சேவையை வழங்க இருக்கிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒன்ப்ளஸ் 13 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்ஃபோனில் 5.5G இணைய சேவையை அறிமுகம் செய்கிறது. 

5.5G நெட்வோர்க் சேவை:

நாடு முழுவதும் பொத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4G நெட்வோர்க், தனியார் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G இணைய சேவையை வழங்கி வருகிறது. 5G வேகத்தில்  350 - 450Mbps வேகத்தில் வீடியோ, ஃபைல்களை டவுன்லோடு செய்யலாம். ஆனால், இப்போது அறிமுகப்படுத்த இருக்கும் 5.5G இணையதள சேவையில் 10Gbps வரை வேகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5G இணையதள சேவையில் என்ன சிறப்பு?

  • 10Gbps வேகத்தில் டவுன்லோடு செய்யலாம்
  • வீடியோ உள்ளிட்டவை  1Gbps வேகத்தில் அப்லோட் ஆகிவிடும்
  • அதிவேக இணையதள சேவை மற்றும் 4K வீடியோ காணும்போது கூட Buffer ஆகாமல் இருக்கும். 
  • லைவ் ஸ்ட்ரீமிங், கேமிங் மற்றும் நெட்வோர்க் சரியாக கிடைக்காதா இடங்களில் கூட 5.5G சேவை பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒன்ப்ளஸ் 13 சீரிஸ் சிறப்புகள்:

ஒன்ப்ளஸ் 13 மற்றும் ஒன்ப்ளஸ் 13R இரண்டுமே கர்வ் டிஸ்ப்ளே கொண்டதுதான். இரண்டிலும் வட்ட வடிவ கேமரா டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல்களில் வீகன் லெதர், க்ளாஸ் என இரண்டு வகையான ஃபோன் கேஎஸ் உடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  IP68 and IP69 அளவு டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டது. இது ஒன் ப்ளஸ் 13R மாடலில் கிடைக்காது. 

தொழில்நுட்ப சிறப்புகள் என்னென்ன?

ஒன்ப்ளஸ் 13 சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களில் 6,000mAh பேட்டரி, அதிக விரைவு சார்ஜிங், புதிய சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளது. oன் ப்ளஸ் 13 Snapdragon 8 Elite chipset, ஒன் ப்ளஸ் 13R  Qualcomm’s Snapdragon 8 Gen 3 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் OxygenOS 15 ஒ.எஸ். கொண்டுள்ளது. இரண்டிற்கும் 3-4 ஆண்டுகள் சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேமரா சிறப்புகள் என்ன?

ஒன்ப்ளஸ் 13 50MP Sony LYT-808 ப்ரைமரி கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ராவைட் சென்சார் கொண்டுள்ளது. OnePlus 13R மூன்று கேமராவுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. 50MP ப்ரைமரி கேமரா, டெலிஃபோட்டீ லென்ஸ், 8MP அல்ட்ராவைட் லென்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விலை விவரம்:

ஒன்ப்ளஸ் 13 மாடல் 12GB + 256GB வேரியண்ட் ரூ. 69,999-க்கும் 16GB + 512GB வேரியண்ட் ரூ.76,999, 24GB + 1TB வேரியண்ட் ரூ. 89,999-க்கும் விற்பனையாகிறது. 

ஒன்ப்ளஸ் 13R  மாடல் 12GB + 256GB வேரியண்ட் ரூ.42,999-க்கும் 16GB + 512GB வேரியண்ட் ரூ.49,999-க்கும் விற்பனையாகிறது.

ஒன்ப்ளஸ் 13 ஸ்மார்ட்ஃபோம் விற்பனை ஜனவரி-10தேதியும் ஒன் ப்ளஸ் 13R மாடலின் விற்பனை ஜனவரி-13ம் தேதியும் தொடங்கும். ஒன்ப்ளஸ் 13-வது சீரிஸ் சந்தையில் வெளியாகியுள்ளது. பல புதிய அப்டேட்கள், தொழில்நுட்ப அம்சங்கள் புதிய மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது. 6,000mAh பேட்டரி,  ஆண்ட்ராய்டு 15,OxygenOS 15 உள்ளிட்ட பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget