(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp: உங்கள் ஃபேவரைட் நபர்கள் யார்? லிஸ்ட்டை ரெடி பண்ணுங்க! வந்தது வாட்ஸ் அப் அப்டேட்
WhatsApp New Features: வாட்ஸ்-அப்பில் வெளிவந்துள்ள புதிய அப்டேட்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
கான்டெக்ட் லிஸ்டில் ஃபேவரைட் லிஸ்ட் (Favourites list) அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப் அறிமுகம் செய்யப்பட்ட 2015-ம் ஆண்டிலுருந்து அந்நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றிற்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மெட்டா நிறுவனம் பயனாளர்களின் வசதிற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்வது வழக்கம். பயனாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. குழு வீடியோ கால் வசதியில் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, 'All', 'Unread', 'Groups' Images, வீடியோ, லிங்க்ஸ் என சர்ச் டேப், மெட்டா ஏ.ஐ. உள்ளிட்ட அப்டேட்களை வழங்கியிருந்தது.
ஃபேவரைட் லிஸ்ட்:
வாட்ஸ் அப் கான்டெக்ட் லிஸ்டில் உள்ளவர்களில் தேடி உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மெசேஜ் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஏற்கனவே, PIn Chat என்ற ஆப்சன் இருக்கிறது. இதன்மூலம் மூன்று சாட்களை பின் செய்து வைக்கலாம். இது உங்களின் சாட் லிஸ்டில் முதலில் இடம்பெறும். விரைவில் இதன் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்த்தப்பட உள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
இப்போது புதிய அப்டேட் இன்னும் வசதியாக இருக்கும். ஆம். புதிதாக 'favourites List' எனபதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனிநபர், குழு என எதுவாக இருந்தாலும அதை ஃபேவரட் லிஸ்டில் சேர்க்கலாம். இது மற்ற சாட்களில் இருந்து தனியே இருக்கும். வாட்ஸ் அப் Call-களிலும் இந்த வசதி இருக்கிறது.
பயன்படுத்துவது எப்படி?
- சாட் ஸ்க்ரீன் ‘favorites என்ற ஃபில்டரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது கான்டெக்ட்களை சேர்க்கலாம்.
- வாட்ஸ் அப் கால் டேப்பில் ’Add favorite' என்பதை க்ளிக் செய்து விருப்பமான குரூப் அல்லது கான்டெக்ட்களை சேர்க்கலாம்.
- இல்லையெனில், 'Settings > Favorites > Add to Favorites' என்ற முறையில் உங்களின் ஃபேவரட் லிஸ்ட்டை சேர்க்கலாம். இதை எப்போது வேண்டுமானாலும்,உங்களுக்கு விருப்பமான வரிசையில் ஆர்டர் செய்யலாம்.
விரைவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் புரோஃபைல் ஃபோட்டோ வைக்கும் வசதியை அறிமுக செய்ய இருக்கிறது. வாட்ஸ் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் என்னென்ன அப்டேட்கள்:
ஸ்பீக்கர் ஸ்பாட்லைட்
வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளில் பங்கேற்பாளர்கள் நிறைய பேர் இருக்கும்போது யார் பேசுகிறார்கள் அல்லது பேச வேண்டும் உள்ளிட்டவற்றை ஒருவர் நிர்வகிக்க முடியும். யார் எப்போது பேசுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ‘ஸ்பீக்கர் ஸ்பாட்லைட்’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் அம்சத்துடன், வீடியோ அழைப்பில் பேசும் நபர் தானாகவே உங்கள் திரையில் முதலில் தோன்றுவார். இது பயனர்கள் உரையாடல்களைப் பின்தொடர்வதை எளிதாக்கும் மற்றும் பேச்சாளர் கவனத்தைப் பெறுவதை இது உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்ஸ் அம்சம் - வாட்ஸ் அப் வெப்
WhatsApp beta for Android 2.24.9.12 வர்ஷனில் முக்கியமான விசயங்களை ‘நோட்ஸ்’ என்பதில் குறிப்பிடலாம். இதன் மூலம் தொழில், வேலை சார்ந்த முக்கியமான நிகழ்வுகள், நினைவுபடுத்த வேண்டியவை ஆகியவற்றை சிறு குறிப்பாக எழுதலாம். தொழில் ரீதியிலாக அனுப்ப வேண்டிய பணம், ஃபைல் உள்ளிட்டவற்றை நோட்ஸாக எழுதுவது குறித்த அப்டேட் மொபைல் பயனர்களுக்கு கிடைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இதோடு வாட்ஸ் அப் வெப் வர்ஷனிலும் புதிய நோட்ஸ் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயோவிற்கு கீழே ‘Notes' என்று ஒரு டேப் இருக்கிறது. இது வாட்ஸ் அப் பிசினஸ் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் / வாடிக்கையாளர் குறித்த விவரங்கள், அவர்களின் விருப்பத் தேர்வு, நிதி சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை சேமித்து வைக்க முடியும்..
இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்யும் வசதி, வாட்ஸ் அப் ஸ்டேடஸுக்கு லைக் செய்யும் வசதி ஆகியவை டெவலப் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.