(Source: Poll of Polls)
நாசா வெளியிடப்போகும் விண்வெளி வீரர், வீராங்கனைகள் தேர்வு பட்டியல்.. தகுதி என்ன தெரியுமா?
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி பயிற்சிக்கான வீரர் வீராங்கனைகளை பட்டியல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அடிக்கடி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வருகிறது. இதற்காக அவ்வப்போது வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்யும் பணிகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோர்களுக்கு சரியான பயிற்சி அளித்த பின்பு அவர்களை விண்கலத்தில் அனுப்பி வைத்து வருகிறது. அந்தவகையில் தற்போது புதிதாக நாசாவின் பல ஆய்வு திட்டங்களுக்கு வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது.
இந்த தேர்வு தொடர்பான இறுதி பட்டியல் இன்று இரவு 11 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் தேர்ச்சி பெறும் நபர்கள் வரும் ஜனவரி மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும். அந்தப் பயிற்சிக்கு பிறகு அவர்கள் நாசாவின் விண்கலங்களில் பயணம் செய்து விண்வெளி செல்ல முடியும். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு வரவேற்கப்பட்டன. அதில் 12 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர்.
நாசாவிற்கு விண்ணப்பிக்க தகுதி என்ன?
நாசாவின் விண்வெளி வீரர் வீராங்கனை திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் அதுக்கு சில தகுதிகள் உள்ளன. அவை:
- அமெரிக்க குடியுரிமை பெற்று இருக்க வேண்டும்
- அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் முதுகலை பட்டம் வைத்திருக்க வேண்டும்.
- அத்துடன் 3 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் இல்லையென்றால் 1000 மணி நேரமாவது குறைந்தது ஜெட் ஏர்கிராஃப்ட்டை இயக்கி இருக்க வேண்டும்.
- மேலும் நாசாவின் நீண்ட நேர விண்வெளி மாதிரி பயணம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்த பிறகு தான் ஒருவர் விண்ணப்பத்தை அளிக்க முடியும். அதன்பின்னர் விண்ணப்பித்தவர்களிலிருந்து நாசா வீரர் வீராங்கனைகளை பயிற்சிக்கு தேர்வு செய்யும்.
நாசா பட்டியலில் இந்திய வம்சாவளியினர் இடம்பெறுவார்களா?
இந்த முறை விண்ணப்பித்தவர்கள் மற்றும் தேர்வானர்கள் தொடர்பாக நாசா இதுவரை மவுனம் காத்து வருகிறது. ஆகவே இந்திய வம்சாவளியை சேர்ந்த எத்தனை பேர் விண்ணபித்துள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு ராஜா சாரி இந்த திட்டத்திற்கு தேர்வாகியிருந்தார். அவர் அப்போது அமெரிக்க விமானப்படையில் விமானியாக இருந்தார். அமெரிக்க விமானப்படையின் பல்வேறு விமானங்களை அவர் இயக்கி இருந்தார்.
அவருக்கு முன்பாக 1998ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியிருந்தார். அவர் பயிற்சியை முடித்து இதுவரை இரண்டு முறை விண்வெளி சென்று வந்துள்ளார். தற்போது அவர் தன்னுடைய மூன்றாவது விண்வெளி பயணத்திற்காக பயிற்சியில் உள்ளார். அவர் போயிங் ரக ஸ்பேஸ்கிராஃப்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ரக விமானத்தில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல உள்ளனர். அந்தத் திட்டத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛மிஸ் பண்ணாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க...’ - ரூ.25,000 - ரூ. 42,000 வரை ஐபோன் விலை குறைப்பு!