POCO F4 5G : அறிமுகமானது POCO F4 5G மொபைல்; டிரிபில் கேமரா, 256 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்.. இன்னும் சூப்பரான சிறப்பம்சங்கள்..
டிரிபில் கேமரா, 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் என அட்வான்ஸ் ஃப்யூச்சர்ஸுடன் அறிமுகமாகிறது போகோ 5G மாடல் மொபைல்.
டிரிபில் கேமரா, 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் என அட்வான்ஸ் ஃப்யூச்சர்ஸுடன் அறிமுகமாகிறது போகோ 5ஜி மாடல் மொபைல்.
வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு அப்டேட் என்பது வந்து கொண்டே இருக்கிறது. பரபரப்பான உலகிற்காக அந்த அப்டேட்டுகள் தேவையா அல்லது அப்டேட்டுகளால் உலகம் பரபரப்பாக இயங்குகிறதா எனும் கேள்வி நம்மில் பலருக்கும் ஏற்படலாம். ஆனால் எல்லா அப்டேட்டுகளும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை எடுத்துறைக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அவ்வகையில் இந்தியாவில் தனது மொபைல் போன்களை மிகச் சிறப்பாகவும், மக்களின் நம்பிக்கையினையும் பெற்றுள்ள போகோ மொபைல் தற்போது 5G மாடல் மொபைலினை அறிமுகப்படுத்தியுள்ளது.
போகோ எஃப்4 5G
போகோ எஃப்4 5G மொபைல் இந்தியாவில் அறிமுகமாகக் கூடிய விலை உயர்ந்த ஆன்ட்ராய்டு மொபைல் போன்களின் வரிசையில் இணைந்து கொள்கிறது. இதன் சிறப்பம்சங்கள் தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஸ்னேப்ட்ரேகன் 870 SoC பிராசஸர், 120Hz அல்மோல்ட் பவர்ஃபுல் டிஸ்ப்ளே, டால்பி ஸ்பீக்கர், டால்பி விஷன் என அதிரடியான சிறப்பம்சங்களுடன் புதிய 5G மொபைல் போன்.
விலை விபரங்கள்
இதன் தொடக்க மாடலாக 6GB ரேம் மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதன் விலை ரூபாய் 27’999 ஆகவும்,
8GB ரேம் மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மொபைலின் விலை ரூபாய் 29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12GB ரேம் மற்றும் 256GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ள மொபைலின் விலை ரூபாய் 33,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 4500mAH பவர் உடையதாகவும், 67W ஸ்பீடு சார்ஜர் வசதியுடனும் வெளிவருகிறது.
நைட் ப்ளேக் மற்றும் நெபுலா கிரீன் நிறங்களில் இந்த மொபைல் வெளிவர இருக்கிறது. 20MP செல்பி கேமரா, 64MP பிரைமரி கேமரா மற்றும் 2MP மைக்ரோ ஸுட்டர் கேமரா என்ற சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அரசு 5G நெட்வொர்க்கிற்காக அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களையும் ஏலத்திற்கு அழைத்திருந்த நிலையில், இந்திய மொபைல் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. இனி தொடர்ந்து அனைத்து மொபைல் நிறுவனங்களும் 5G மொபைல்களை ஏலம் முடிவடைவதற்குள் புதிய மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்