Realme C31: ரூ.10ஆயிரத்துக்குள் பக்காவான பட்ஜெட் போன்..! களமிறங்கிய Realme C31!!
C - சீரிஸ் மாடலாக களமிறங்கும் இந்த போன் ரியல்மி ஆன்லைன் ஸ்டோரிலும், பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனையிலும் கிடைக்கிறது.
பட்ஜெட் போனுக்கு பெயர்பெற்ற ரியல்மி தொடர்ந்து புதுப்புது போன்களை சந்தையில் இறக்கி வருகிறது. பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சிறு சிறு மாற்றங்களை கொடுத்து விலை வித்தியாசங்கள் அடிப்படையில் புதிய போன்களை ரியல்மி அவ்வப்போது அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ரியல்மி களமிறக்கும் மாடல் ரியல்மி C31. இந்தியாவில் இன்று மதியம் ரியல்மி C31 மாடல் வெளியானது. C - சீரிஸ் மாடலாக களமிறங்கும் இந்த போன் ரியல்மி ஆன்லைன் ஸ்டோரிலும், பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனையிலும் கிடைக்கிறது.
View this post on Instagram
விலை என்ன?
பட்ஜெட் பிரியர்களை மனதில் வைத்து அறிமுகமான இந்த மாடல் செல்போன் ரூ.10ஆயிரத்துக்குள்ளான செல்போனாக உள்ளது. 3GB + 32GB மாடல் ரூ. 8,999க்கு விற்பனையாகிறது. அதேபோல, 4GB + 64GB மாடலானது ரூ.9,999க்கு விற்பனையாகவுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும். அதன்படி , கரும்பச்சை மற்றும் லைட் சில்வர் வண்ணங்களில் இது கிடைக்கும்.
The #realmeC31 features a Side-mounted Fingerprint for Fast Unlock, making your life easier & effortless!#NayeZamaneKaEntertainment
— realme (@realmeIndia) April 5, 2022
Starting at ₹8,999/-
First Sale at 12 PM, Tomorrow, on https://t.co/HrgDJTHBFX & @Flipkart
Know more: https://t.co/qIeQYtjk6d pic.twitter.com/X2ZAsMfohT
சிறப்பம்சங்கள் என்ன?
டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.52 இன்ச் அளவுகொண்ட டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, Unisoc T612 ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை முன்பக்கம் 5 மெகா பிக்ஸல் கொண்டதாகவும், பின்பக்க கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்ஸல் + 2 மெகாபிக்ஸல் மற்றும் மோனோகுரோம் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கெபாசிட்டியைப் பொறுத்தவரை 5000mAh ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் 11 ஆகவும், 720x1600 pixels ரெசோலேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.