மேலும் அறிய

Google Pixel 8: பிக்சல் 8 மாடல் செல்போன்களை அறிமுகம் செய்தது கூகுள் - ஐபோனுக்கு டஃப் கொடுக்கும் விலை

Googles Pixel 8: கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ மாடல் செல்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Googles Pixel 8:  கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மாடல் செல்போனின் விலை, இந்திய சந்தையில் 75 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூகுளின் பிக்சல் 8 செல்போன் அறிமுகம்:

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ sஎல்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய புதிய 5G போன்கள் வடிவமைப்பில் பழைய மாடலை பின்பற்றி இருந்தாலும்,  புதிய கூகுள் ஃபிளாக்ஷிப் சிப்செட் மற்றும் சிறந்த கேமராக்கள் ஆகியவை புதியதாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிக்சல் 8 சீரிஸ் செல்போன்ன் விலை, விற்பனை தேதி மற்றும் பிற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பிக்சல் 8 செல்போனின் அம்சங்கள்:

கூகுள் பிக்சல் 8 மாடல் செல்போனில் சிறிய 6.2 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ஓ.எல்.ஈ.டி டிஸ்ப்ளே, வழங்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 2,000நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  கூகுளின் அடுத்த தலைமுறை முதன்மையான டென்சர் ஜி3 சிப்செட் மூலம் பிக்சல் 8 இயக்கப்படுகிறது. இது ஸ்விஃப்ட் கோப்பு அணுகலுக்கான சமீபத்திய UFS 4.0 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, பிக்சல் 8 ஆனது 8x சூப்பர்-ரெஸ் டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் ஆக்டா-பிடி பிரதான கேமராவை கொண்டுள்ளது. ஆட்டோ போகஸ் மற்றும் மேக்ரோ திறன்களைக் கொண்ட 12 மெகாபிக்சல் சென்சாரும் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால் வசதிக்காக 10.5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4,575mAh பேட்டரியை கொண்டுள்ள இந்த செல்போன் 27W வேகமான வயர்டு சார்ஜிங்கை வசதியை வழங்குகிறது. கூடுதலாக சார்ஜர் இல்லாமல் 18W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பிக்சல் 8 ப்ரோ செல்போனின் அம்சங்கள்:

பிக்சல் 8 ப்ரோ மாடலில் 6.7-இன்ச் QHD+ 120Hz LTPO OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது 2,400நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும்  கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 10.5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. பின்புறத்தில், மூன்று கேமரா சென்சார்கள் உள்ளன. அதன்படி,  OIS உடன் 50-மெகாபிக்சல் ஃபேஸ்-டிடெக்ட் ஆட்டோபோகஸ் வைட் கேமரா, ஒரு புதிய 48-மெகாபிக்சல் குவாட்-PD அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 48-மெகாபிக்சல் குவாட்-பிடி 5x ஜூம் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.  30W வயர்டு சார்ஜிங் மற்றும் 23W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ள இந்த போனில்,  5,050mAh பேட்டரி உள்ளது. டைட்டன் பாதுகாப்பு சிப், 12 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு, வெப்பநிலை கண்காணிப்பு சென்சார் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது. புதியதாக தோலின் வெப்பநிலையை காட்டும் சென்சாரும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 

பிக்சல் 8 சீரிஸ்ல் உள்ள பொதுவான அம்சங்கள்:

பிக்சல் 8 சீரிஸில் பல்வேறு  புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.  அதன்படி, இதில் உள்ள பெஸ்ட் டேக் அம்சம்,  இது தொடர்ச்சியான புகைப்படங்களில் இருந்து ஒரு கொலேஜ் படத்தை உருவாக்க உதவும். புகைப்படங்களை மாற்றியமைக்கவும், மேம்படுத்தவும் மேஜிக் எடிட்டர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. வீடியோக்களில் வரும் தேவையற்ற ஒலியை நீக்கும் வகையில், ஆடியோ மேஜிக் எரேசர, புகைப்படத்தை அன்ப்ளர் செய்வது மற்றும் மேக்ரோ ஃபோகஸ் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய Google Pixel 8 சீரிஸ் போன்கள் Google One வழங்கும் இலவச VPN உடன் வருகின்றன. கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

விலை விவரங்கள்:

பிக்சல் 8 செல்போனின் ஆரம்ப விலை  ரூ.75,999 எனவும்,  பிக்சல் 8 ப்ரோ மாடலின் விலை ரூ.1,06,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஆன்லைன் விற்பனை தளமான Flipkart மூலம் அக்டோபர் 12ம் தேதி முதல் வாங்கலாம். இதற்கான் முன்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளுக்கு ரூ.8,000 தள்ளுபடி உள்ளது. இது நிலையான மாடலுக்கு பொருந்தும். புரோ வாங்குபவர்கள் ரூ.9,000 தள்ளுபடியைப் பெற முடியும். ஸ்டேண்டர்ட் மாடல் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் அம்சங்களிலும், ப்ரோ மாடல் 128GB, 256GB மற்றும் 512GB ஆகிய ஸ்டோரேஜ் அம்சங்களிலும் கிடைக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget