ChatGPT Down: தொழில்நுட்ப கோளாறு - முடங்கிய ChatGPT; வேலை போயிடும் - ஷோசியல் மீடியா ரியாக்சன்!
ChatGPT Down: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ChatGPT வெப்சைட், செயலி முடங்கியுள்ளது.

ChatGPT-யில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் உலக அளவில் பயனர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக வெளியாக Open AI பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது வருகிறது. அதில் ஒன்று, ChatGPT. கல்வி, மருத்துவம், மார்க்கெட்டிங் என பல்வேறு துறைகளிலும் ChatGPT-யின் பயன்பாடு இல்லாமல் இருக்காது என்ற சொல்லும் நிலை. தொழில்ரீதியிலான உரையாடல், Causual உரையாடல், கடிதங்க, ஆராய்ச்சி கட்டுரைகள் என எது வேண்டுமாலும் Open AI-யிடன் தலைப்பு கொடுத்தால் போதும். மொத்தமாக அதுவே எழுதிக் கொடுத்துவிடும்.

ChatGPT:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் AI chatbot -ChatGPT. இது உலகளவில் மிகவும் பிரபலமானது. கோடிக்கணக்கானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். ChatGPT-யின் இணையதளம் தீடீரென முடங்கியுள்ளது. இதனால் ஏராளமானோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அன்றாட வேலைகளை மேற்கொள்பவர்கள் ChatGPT முடங்கியுள்ளதால் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
OpenAI :
ChatGPT -முடங்கியுள்ளது தொடர்பாக OpenAI வெளியிட்டுள்ள தகவலின்படி, தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”என் வேலை போயிடும்!” சமூக வலைதளங்களில் கமெண்ட்!
ChatGPT - முடங்கியுள்ளதால் பலரும் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். #ChatGPTdown என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் வேலைக்கு ChatGPT-யின் உதவியை நம்பி இருப்பதால் அவர்களுக்கு இந்த சூழல் கடினமானதாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நகைச்சுவையான மீம்ஸ், GIF's பகிர்ந்து வருகின்றனர்.
” ChatGPT -இல்லையா? என்னோட வேலை போயிடுமே!” என பகிந்துள்ளார். இன்னொருவர் “ என் மேஜேனர் என் மூளையை பயன்படுத்தி வேலை செய்ய சொல்றாரே!” என்று பல வீடியோக்களை பகிந்து பதிவிட்டுள்ளனர். ChatGPT செயல்பாடுகள் விரைவில் சீராகும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
Me waiting for ChatGPT to comeback online. #chatgptdown pic.twitter.com/uU0c52YkBs
— Daniel SHEMA IRADUKUNDA🇷🇼 (@danieliradukun6) January 23, 2025
Business after finding out chatgpt is down #chatgptdown pic.twitter.com/LyLhO6pTPa
— Nitish (@nitishisme) January 23, 2025
ChatGPT is down😱 Now my manager is asking me to use my brain for doing the work😰 pic.twitter.com/0TaNAVrGZX
— Aastha Mishra (@code_shadow24) January 23, 2025When ChatGPT goes down for 5 minutes pic.twitter.com/JvBTiB9gRF
— Brandon Luu, MD (@BrandonLuuMD) January 23, 2025





















