Creating Sperm Using Chip :அடேங்கப்பா பெரிய அதிசயம்.. சிப் மூலம் விந்தணுவை உருவாக்கி சாதனை படைத்த மருத்துவர்கள்..
மைக்ரோ ஃப்ளூய்டிக் முறையில் விந்து அனுக்களை உருவாக்கும் சிப்பை மருத்துவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மைக்ரோ ஃப்ளூய்டிக் முறையில் விந்து அனுக்களை உருவாக்கும் சிப்பை மருத்துவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வெளியான ஆய்வு முடிவு:
பென் குரியான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு மக்ரோஃப்ளூய்டிக் சிஸ்டம் முறையில் விந்து அனுவை உருவாக்கியுள்ளனர். கேன்சரால் பாதிக்கப்பட்டு கீமோ தெரபி மூலம் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு நாளடைவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் டெக்னியான் மற்றும் இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து சிலிக்கான் சிப்பைப் பயன்படுத்தி மைக்ரோஃப்ளூய்டிக் முறையில் ஆய்வகத்தில் விந்தனுவை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையானது பயோஃபேப்ரிகேஷன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
ஆய்வகத்தில் விந்துவை உற்பத்தி செய்வது குறித்த அமைப்பை கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருந்தது. அதனால் நோயாளியின் உடலுக்கு புற்றுநோய் செல்கள் திரும்புவது போன்ற வரம்புகளை இது கடந்து செல்கிறது. இந்த முறையை ஆய்வு செய்தபோது விந்தனு உற்பத்தியை தொடங்காத இளம் எலியின் விதைப்பைகளில் விந்து அனுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்தோம். அதுமட்டுமல்லாமல், ஆய்வக சூழ்நிலையில் அதாவது, இயற்கை சூழலுக்கு நிகராக மிக நெருக்கமான சூழலில் டெஸ்டிகுலர் செல்களை வளர்ப்பதற்கான ஒரு செயல்முறையை உருவாக்க முடிந்தது. இந்த ஆய்விற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிப் ஒன்றை பயன்படுத்தி முழுமையான 3டி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள மைக்ரோஃப்ளூய்டிக் அமைப்பானது விதைப்பையில் அனுக்கள் வளர உதவுகிறது.
இந்த அமைப்பானது விந்தனுக்களை உருவாக்கும் கலாச்சாரத்தில் புதிய பாதையை திறந்துவிட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை மற்றும் கீமோ மற்றும் ரேடியோ தெரப்பிக்கு உள்ளாகியிருக்கும் சிறுவர்களின் விந்தனுக்களை சேகரித்து வைப்பதன் மூலம் அவர்களது குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும் வியூகங்கங்களுக்கு இந்த மைக்ரோஃப்ளூய்டிக் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் பேருதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக்குழுவினர்:
இந்த ஆய்வானது, பென் குரியான் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ பயாலஜி, இம்யூனாலஜி மற்றும் ஜெனட்டிக்ஸ் குறித்து ஆய்வு செய்துவரும் மாணவர் அலி அபுமதிகெம் (Ali AbuMadighem) தலைமையில், இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர் ஷோலோம் சூசட் (Sholom Shuchat) மற்றும் பேராசிரியர் எமரிடஸ் லுனென்ஃப்ளெட் (Emeritus Eitan Lunenfeld), பேராசிரியர் கிலாட் யோஸிஃபான் (Gilad Yossifon), பேராசிரியர் முகமது ஹுலெய்ஹெல் (Prof. Mahmoud Huleihel) உள்ளிட்ட பலர் அடங்கிய குழு இந்த ஆய்வை நடத்தி புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் குழந்தையின்மை மற்றும் கேன்சர் ஆகியவை பெரும் பிரச்சனையாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் புற்றீசல் போல குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன. எல்லா பிரச்சனைகளுக்கும் அறிவியல் மருத்துவம் மூலம் தீர்வு கண்டு வந்த நிலையில், விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.