Google Play Store: 3,500 கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டாரில் இருந்து நீக்கம்... இதுதான் காரணமா...?
இந்தியாவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை (Online loan App) பிளே ஸ்டாரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள்.
Google Play Store : இந்தியாவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை (Online loan App) பிளே ஸ்டாரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள்.
பிளே ஸ்டார்
Google Play Store என்பது நாம் நமக்கு விருப்பமான கேம்ஸ்களையும், அப்ளிகேஷன்களையும், பாடல்களையும், திரைப்படங்களையும் வாடகைக்கும், மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை பார்க்க பல விதமான செயலிகளைக் கொண்டது. அதில் உள்ள செயலிகளை டவுன்லோட் (Apps Download) செய்து நம்மால் காணவோ, கேட்கவோ, விளையாடவோ இயலும்.
இந்த, Google Play Store என்பது நாம் பயன்படுத்து ஆண்ட்ராய்ட் மொபைல் வெர்ஷனுக்கு ஏற்ற வகையில் மொபைலில் அமைந்திருக்கும். அதுபோலவே, அதன் அப்ளிகேஷன்களும் மாறி நமக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். கூகுள் ப்ளே ஸ்டோரில் அன்றாடம் பலவிதமான செயலிகள் அப்டேட் ஆகின்றன. குறிப்பாக பல லோன் ஆப்கள் (Loan app) இதில் உள்ளன.
3,500 செயலிகள் நீக்கம்
இதில் சில லோன் ஆப்கள் வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள், தரவுகளை தவறாக பயன்படுத்தி பலர் வாழ்க்கையை சீரழிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடன்களுக்கு வட்டிகளை உயர்த்துவதும், அந்த வட்டிக்கு வட்டி போடுவது என சில ஆப்கள் மக்களை சிரமத்திற்குள்ளாக்குகின்றன.
அவர்களில் சிலர் பணம் செலுத்தமுடியாமல் போகும்போது அவர்களுடைய புகைப்படங்களை எடுத்து 'மார்ஃப்' செய்து அவர்களுடைய காண்டாக்ட்டில் இருக்கும் நபர்களுக்கு அனுப்புகின்றனர். அதுபோக அவர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்யும் வழக்கமும் உள்ளது.
இதனை கருத்தில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை (Online loan App) பிளே ஸ்டாரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள். இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் விதிகளை மீறிய காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளது. மேலும் தனது கொள்கையை மீறியதால் 1.43 மில்லியனுக்கும் அதிகமான அப்ளிகேஷன்கள் பிளே ஸ்டோரில் நுழைவதைத் தடுத்ததாகக் கூகுள் கூறியுள்ளது.
மே 31 முதல் அமல்
அண்மையில் கூகுள் பிளே ஸ்டோரின் தனியுரிமை கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, கடன் வழங்கும் ஆப்ஸ்களுக்கு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுதல், அவற்றை பயன்படுத்துதல், தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் கடுமையான விதிகளை விதித்தது கூகுள். இந்த விதிகள் வரும் மே 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இருப்பினும் முன்னதாகவே கூகுள் பிளே ஸ்டார் விதிகளை பின்பற்றாத ஆப்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதனை மீறியும் விதிகளை பின்பற்றாத ஆப்களை நீக்கி வருகிறது கூகுள். மே 31ஆம் தேதி வரையில் ஆப் நிறுவனங்களுக்கு விதிகளை பின்பற்ற கால அவகாசம் எனவும் இல்லையென்றால் ஆப்கள் முடக்கப்படும் எனவும் கூகுள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க