மேலும் அறிய

Play Store : ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 16 ஆஃப்ஸ்..! என்ன காரணம் தெரியுமா..?

ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பு, ஆப்ஸில் மொத்தம் 20 மில்லியன்  இன்ஸ்டாலேஷன் இருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

பயனாளர்களின் சாதனங்களில் இருந்து அதிக இணையத்தை பயன்படுத்தி , சார்ஜை வேகமாக குறைக்கும் 16 ஆண்ட்ராய்ட் செயலிகளை Google Play Store நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல Ars Technica இன் அறிக்கையின்படி,  பாதுகாப்பு நிறுவனமான McAfee  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில்  சார்ஜை குறைக்கும் அளவிற்கு செயலிகள் இருக்கிறது என கண்டறிந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம்  Google Play Store இலிருந்து 16 செயலிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அப்படி இந்த செயலிகள் என்ன செய்கிறது என கேட்டால், செயலிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு , விளம்பரங்களைக் கிளிக் செய்ய  செயலியின் பின்னணியில் வலைப்பக்கங்களைத் திறந்து விளம்பர மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பு, ஆப்ஸில் மொத்தம் 20 மில்லியன்  இன்ஸ்டாலேஷன் இருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

Play Store : ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 16 ஆஃப்ஸ்..! என்ன காரணம் தெரியுமா..?

QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவும், சாதனத்தின் ஃபிளாஷை டார்ச்சாக இயக்கவும் அல்லது பல்வேறு அளவீடுகளை மாற்றவும் பயனர்களை அனுமதிக்கும் செயலிகளின்  பயன்பாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அகற்றப்பட்ட செயலிகளின் பட்டியலில் BusanBus, Joycode, Currency Converter, High-Speed ​​Camera, Smart Task Manager, Flashlight+, K-Dictionary, Quick Note, EzDica, Instagram Profile Downloader மற்றும் Ez Notes ஆகியவை அடங்கும். இந்தப் செயலிகள் திறக்கப்பட்டவுடன் குறியீட்டைப் பதிவிறக்கும் என்று McAfee கண்டறிந்துள்ளது. மேலும் அவை பயனரை எச்சரிக்காமல், இணைப்புகள் மற்றும் விளம்பரங்களைக் கிளிக் செய்யாமல் இணையப் பக்கங்களைத் திறப்பதற்கான அறிவிப்புகளைப் பெறுகின்றன. இந்தச் செயல்பாடு இந்த விளம்பரங்களின் மீதான ஈடுபாட்டை செயற்கையாக அதிகரிக்கும், இது விளம்பர மோசடியின் ஒரு வடிவமாகும் என  இந்த பிரச்சனையை கண்டறிந்த McAfee நிறுவனம் தெரிவிக்கிறது.

Play Store : ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 16 ஆஃப்ஸ்..! என்ன காரணம் தெரியுமா..?
அகற்றப்பட்ட செயலிகள்  அனைத்துமே  "com.liveposting" மற்றும் "com.click.cas" எனப்படும் ஆட்வேர் குறியீட்டுடன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகள் என்ன செய்யும் என்றால்  இணைப்புகள் மற்றும் விளம்பரங்களைக் கிளிக் செய்ய அனுமதிக்கும்.

இவை அனைத்துமே பயனாளர்களுக்கு தெரியாமலேயே நடக்கும். இதனால்  நெட்வொர்க் பயன்பாடு அதிகரித்து மொபைல் பேட்டரி ட்ரைனாவதற்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனையை அறிந்த பிறகு, Play Store இது தொடர்பாக இருந்த அனைத்து செயலிகளும் (மொத்தம் 16) அகற்றப்பட்டதாகவும், பயனர்களின் சாதனங்களில் இந்த பயன்பாடுகளை Play Protect தடுக்கும் என்றும் கூகுள் Ars Technica நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பிறகு ,கூடுதல் குறியீட்டைப் பதிவிறக்கும் என்ற McAfee இன் அறிக்கைதான் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்குவதற்கு கூகுளுக்கு உதவியாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Today Movies in TV, June 23: பீஸ்ட் முதல் பில்லா வரை.. சண்டே ஸ்பெஷல்..டிவியில் என்னென்ன படங்கள்?
பீஸ்ட் முதல் பில்லா வரை.. சண்டே ஸ்பெஷல்..டிவியில் என்னென்ன படங்கள்?
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget