மேலும் அறிய

Elon Musk: குழந்தையாக எலான் மஸ்க்.. வைரலாகும் AI புகைப்படம்… குதூகலமடைந்த ட்விட்டர்வாசிகள்..

கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் எலன் மஸ்க் குழந்தையாக இருப்பதைக் காட்டும் வைரலான படத்தை, நாட் ஜெரோம் பவல் என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டார்.

உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை, AI மூலம் உருவாக்கி டிவிட்டரில் ஒருவர் வெளியிட, அது உடனடியாக வைரல் ஆகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் எலான் மஸ்க்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலன் மஸ்க் உலகெங்கும் புகழ்பெற்ற பணக்காரராக மட்டும் இல்லாமல், அவருடைய சொந்த  சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவரை அவரே காலாய்த்துக்கொள்ளும் மீம்களை வெளியிடுவதை கூட பார்த்திருப்போம். வேறு யாராவது ட்ரோல் செய்தாலும் அதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு பல ரசிகர்களையும் கொண்டு வந்தது.

குழந்தையாக எலான் மஸ்க்

ஏற்கனவே எலன் மஸ்கை இந்திய மணமகன் போன்ற வேடத்தில் AI மூலம் சித்தரித்து உருவாக்கப்பட்ட படம் முன்னர் வைரல் ஆகி இருந்தது. அதற்கும் அவர் ரிப்ளை செய்திருந்தார். இம்முறை அவரை குழந்தை வடிவில் AI மூலம் மாற்றிய ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கும் அவரது சர்காஸ்டிக் பதிலை கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: Odisha Train Accident: 275 பேர் உயிரை பறித்த கோர விபத்து..51 மணி நேர போராட்டம்.. பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

வயது குறைப்பில் ஏற்பட்ட கோளாறு

கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் குழந்தையாக இருப்பதைக் காட்டும் வைரலான படத்தை, நாட் ஜெரோம் பவல் என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டார். அந்த புகைப்படத்தோடு அவர், "பிரேக்கிங்: எலான் மஸ்க் வயதை குறைப்பதில் சில நாட்களாக வேலை செய்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அது அவர் கையை மீறி சென்றுள்ளது" என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 

பதிலளித்த மஸ்க்

AI மூலம் உருவாக்கிய இந்த படம் வைரலான பிறகு, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் இதற்கு பதிலளித்தார். அதில், "நண்பர்களே, நான் கொஞ்சம் அதிகமாக முயற்சியை எடுத்துக்கொண்டேன் என்று நினைக்கிறேன்" என்று தமாஷாக எழுதி அதனுடன், குழந்தை எமோஜியையும் சேர்த்தார். இந்த டுவீட் பகிரப்பட்டதிலிருந்து, மில்லியன் கணக்கானவர்களை சென்று அடைந்துள்ளது. இந்த பதிவு, ட்விட்டர் பயனர்களிடமிருந்து ஏராளமான கமென்ட்களையும் பெற்றுள்ளது. பலர் குழந்தை எலான் மஸ்க் அழகாக இருப்பதாக எழுதியுள்ளனர். இந்த பதிவை வெளியிட்டவர் மஸ்க் கொடுத்த பதிலுக்கு எழுதிய பதிலில், "இப்போது நீங்கள் மார்ஸுக்கு செல்ல அதிகமான கால அவகாசம் கிடைக்கும்" என்று எழுத அதுவும் பலரால் லைக் செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget