ChatGPT: ”தேங்க்ஸ், ப்ளீஸ்” சொல்லாதீங்க.. கோடிக்கணக்குல செலவாகுது - கதறும் ஓபன் AI சிஇஒ சாம் ஆல்ட்மேன்
ChatGPT: சாட்ஜிபிடி பயனாளர்கள் “தேங்க்ஸ், பிளீஸ்” போன்ற வார்த்தைகளை சொல்வதால் தங்களுக்கு அதிகம் செலவாவதாக, ஓபன்ஏஐ சிஇஒ ஆல்ட்மேன் கவலை தெரிவித்துள்ளார்.

ChatGPT: சாட்ஜிபிடிக்கு பயனாளர்கள் “தேங்க்ஸ், பிளீஸ்” போன்றவற்றை சொல்ல வேண்டாம் என, ஓபன்ஏஐ சிஇஒ ஆல்ட்மேன் வலியுறுத்தியுள்ளார்.
கோடிக்கணக்கில் செலவு:
யாரேனும் நமக்கு உதவி செய்தால் அவருக்கு ”நன்றி” (Thanks) சொல்வதும், ஏதேனும் ஒரு பணியை செய்து முடிக்கும்படி ஒருவரிடம் கோரிக்கை வைக்கும்போது ”தயவு செய்து” (Please) போன்ற வார்த்தைகளை நாம் மரியாதை நிமித்தமாக பயன்படுத்துகிறோம். மனிதர்களை தாண்டி, தற்போது நாம் பயன்படுத்த தொடங்கியுள்ள சாட்ஜிபிடி தொழில்நுட்பத்திடமும் பயனர்கள் “தேங்க்ஸ், பிளீஸ்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பயனர்களின் இந்த மரியாதை நிமித்த செயல்களால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மின்சார செலவுக்கு வழிவகுப்பதாக ஓபன்ஏஐ சிஇஒ ஆல்ட்மேன் கவலை தெரிவித்துள்ளார். அந்த கூடுதல் உரையாடல்களுக்கு பதிலாக மின்சார பயன்பாடு அதிகரிப்பதகாவும் குறிப்பிடுகிறார்.
கேள்வியும்.. பதிலும்..
பயனர்களின் மரியாதை நிமித்தமான குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதற்காக, ஓபன்ஏஐ எவ்வளவு செலவு செய்து இருக்கும் என சமூக வலைதளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கையில், “பல்லாயிரக்கணக்கான டாலர்கள் நன்றாக செலவிடப்படுகின்றன. அவை உங்களுக்கு ஒருபோதும் தெரியாது” என பதிலளித்துள்ளார். பயனர்களின் செயல்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தான் சாட்ஜிபிடி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் மரியாதை நிமித்தமாக ”தேங்க்ஸ், ப்ளீஸ்” சொன்னால் அதற்கும் சாட்ஜிபிடி மின்சாரத்தை செலவிட்டு பதிலளிக்கும். இந்த அநாவசிய உரையாடல்களால் கோடிக்கணக்கில் பணம் செலவாவதாக ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
உணர்வுகள் இல்லாத AI:
செயற்கை நுண்ணறிவு என்பது உணர்வுகள் இல்லாத ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மட்டுமே. ஆனாலும், தினசரி பயன்பாட்டின்போது மக்கள் மரியாதை நிமித்தமாக “தேங்க்ஸ், சாரி, ப்ளீஸ்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இந்தப் பதில்கள் முக்கியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் அவை AI ஐப் பயன்படுத்துவதை மிகவும் மனிதாபிமானமாக்குகின்றன.
சாட்ஜிபிடி மலிவானதா?
உங்களின் உரையாடலுக்கான ஒவ்வொரு பதிலுக்கும் பின்னால், ஆற்றல் தேவைப்படும் தரவு மையங்களால் இயக்கப்படும் உயர் செயல்திறன் கொண்ட AI மாதிரி உள்ளது. இந்த வசதிகள் கணினிக்கு மட்டுமல்ல, வன்பொருள் அதிக வெப்பமடைவதைத் தடுக்கத் தேவையான குளிரூட்டும் அமைப்புகளுக்கும் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. இதனால் சாட்ஜிபிடி பயன்பாடு என்பது மிகவும் செலவு மிக்கது. எனவே, ChatGPT இன் வேகமான அல்லது திறமையான பதிப்புகளுக்கான அணுகலுக்கு, பணம் செலுத்தும் பிரீமியம் பயனர்கள், "நன்றி" சொல்வது அவசியமா? என சிந்தியுங்கள். எனவே அடுத்த முறை ChatGPT-ஐப் பயன்படுத்தும்போது வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்கள்.
செலவை ஏற்கும் ஓபன்ஏஐ:
பயனர்களின் மரியாதையால் சாட்ஜிபிடியின் ஆற்றல் செலவு புருவங்களை உயர்த்தக்கூடும் என்றாலும், ஆல்ட்மேனின் பதில், OpenAI வெறும் செயல்திறனுக்கு அப்பால் மதிப்பைப் பார்க்கிறது என்பதைக் குறிக்கிறது. உள்ளுணர்வு மற்றும் தொடர்பு கொள்ள இயற்கையாக உணரக்கூடிய AI ஐ உருவாக்குவதற்கான நிறுவனத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, நிதி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை தலைமை நிர்வாக அதிகாரி ஏற்றுக்கொள்வது போல் தெரிகிறது.





















