Android 14: ஆண்ட்ராய்டில் வந்தது புதிய அப்டேட்.. இனி இந்த ஆப்களை டவுன்லோட் செய்ய முடியாது! விவரம் உள்ளே!
ஆண்ட்ராய்ட் போன்களில் இனி காலாவதியான் ஆப்களை பதிவிறக்கம் செய்ய முடியாது என்ற, புதிய அம்சம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ராய்ட் அப்டேட்:
கூகுளின் கிளை நிறுவனமான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்ட் 13 வெர்ஷன் வெளியான நிலையில், அதில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக ஃபோட்டோ பிக்கர் என்னும் புதிய வசதியை ஆண்ட்ராய்ட் 13 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயனாளர்கள் கிளவுட் மூலம் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ மற்றும் ஆவணங்களை, பாதுகாப்பான முறையில் பகிர்ந்து கொள்ளலாம். இந்நிலையில், ஆண்ட்ராய்ட் 14 வெர்ஷனை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் 14:
ஆண்ட்ராய்ட் 14 வெர்ஷன் வரும் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வெர்ஷன் ஆண்ட்ராய்ட், சாதனங்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, “ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் பழைய வெர்ஷன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, sideloading செயலிகளை கூட ஆண்ட்ராய்ட் 14 வெர்ஷன் அனுமதிக்காது ” என கூறப்படுகிறது.
புதிய அம்சம் இதுதான்
தற்போதைய சூழலில், ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 12-க்கு முந்தைய பழைய பதிப்புகளை பாதிப்பதை தடுக்க, புதியதாக பட்டியலிடப்பட்ட செயலிகளை கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோரில் அனுமதிப்பதில்லை. ஆனாலும், அவை பழைய வெர்ஷன்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்த பழைய செயலிகளை மீண்டும் பதிவிறக்கம் செய்யவும், ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 13 அனுமதித்து வருகிறது. இதனால், இயங்கு தளத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனை தடுக்கும் வகையில் தான், ஆண்ட்ரய்ட் 14 பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம், காலாவதியான செயலிகளை பதிவிறக்கம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பழைய ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களை பாதிக்கும் செயலிகளை மட்டுமே தடுக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது காலாவதியான அனைத்து செயலிகளின் பதிவிறக்கமும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் தகவல்:
முன்னதாக, ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி செயற்கைக்கோள் இணைப்பை வழங்குவதற்கான திட்டங்களை ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டி-மொபைல் நிறுவனக்கள் வெளியிட்ட பிறகு, வரவிருக்கும் ஆண்ட்ராய்டு 14 குறிப்பிட்ட சேவைகள் அனைத்தையும் செயல்படுத்துவதில் தங்களது கூட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் என, கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.