Amazon Great Indian Festival Sale: ‛இது ஷாப்பிங் மாசம்’ - அமேசான் அறிவித்த அதிரடி தள்ளுபடிகள்!
அமேசானிலும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளதால், ஷாப்பிங் செய்ய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்கான ’க்ரேட் இந்திய விற்பனை’ (Great Indian Sale) தேதியை அறிவித்துள்ளது. 2021 அக்டோபர் மாத இறுதியில் இந்த தள்ளுபடி விற்பனை காலம் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. இதில் மொபைல்ஃபோன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் , ஆடைகள், ஃபர்னிச்சர்ஸ், அமேசான் சாதனங்கள் என அனைத்திலும் விலை சலுகைகளை அறிவிக்க உள்ளது அமேசான். பல்வேறு கேட்டகிரியில் பல பொருட்களை புதிதாகவும் அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான முன்னோட்டமாக தள்ளுபடி விற்பனை குறித்த சில தகவல்களை அமேசான் இந்தியா வெளியிட்டுள்ளது.
#AmazonGreatIndianFestival is coming soon.
— Amazon India (@amazonIN) September 21, 2021
So you can shop for all your needs within your budget. 😍
Choose from crores of products from the comfort of your home and pay on delivery. 🚪#ComingSoon pic.twitter.com/M7XaZt9jYM
மற்றுமொரு முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட், ’பிக் பில்லியன் டேஸ்’ தள்ளுபடி விற்பனையை அறிவித்திருந்தது. அக்டோபர் 7 முதல் 12 வரை ப்ளிப்கார்ட் விற்பனை நடைபெற உள்ள நிலையில், இதற்கு போட்டியாக அமேசான் சார்பில் க்ரேட் இந்தியன் சேல் அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது.
ப்ளிப்கார்டின் தள்ளுபடி விற்பனையைப் போலவே, அமேசானிலும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளதால், ஷாப்பிங் செய்ய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இரண்டில் எது ‘பெஸ்ட்’ என பட்ஜெட் பார்த்து வருகின்றனர். இதனால், தள்ளுபடி என்ற பெயரில் இந்த அக்டோபர் மாதம் ஷாப்பிங் விற்பனை பர்ஸை காலி செய்ய காத்திருக்கிறது.
Fit all your needs within your budget, with great deals and bank discounts, at #AmazonGreatIndianFestival #ComingSoon pic.twitter.com/2cdp9Zx3HP
— Amazon India (@amazonIN) September 19, 2021
குறிப்பாக, எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சிறப்பு 10% தள்ளுபடியும், இஎம்ஐ ஆப்ஷன்களும் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாலாஜி ஃபின்சர்வ் மூலம் பெற்ற கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, 1 லட்சம் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும், அமேசான் கிரேட் இந்தியன் சேல் விற்பனையின் அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் அறிவிக்கபப்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.