Watch Video: ‛ ஒரு நாள் பாக்., வெற்றி பெறும்...’ அன்றே சொன்ன தோனி...!
2016 டி-20 உலகக்கோப்பையின்போது பாகி., அணியைப் பற்றி தோனி தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த நாஸ்டால்ஜிக் வீடியோதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போதைக்கு மிக தேவையான ஒன்றாக இருக்கின்றது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த இந்தியா - பாகிஸ்தாண் அணிகள் மோதிய போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. வெற்றியோ, தோல்வியோ, இரு அணி வீரர்களை தாண்டியும் இரு நாட்டு மக்களையும் போட்டியின் முடிவு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், 29 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை தொடரில், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி இருக்கிறது. 2016 டி-20 உலகக்கோப்பையின்போது பாகி., அணியைப் பற்றி தோனி தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த நாஸ்டால்ஜிக் வீடியோதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போதைக்கு மிக தேவையான ஒன்றாக இருக்கின்றது.
2016 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்போதைய இந்திய அணி கேப்டன் தோனி, “ஒரு நாள் நாங்களும் தோல்வியை சந்திக்க நேரிடும். இன்றைக்கு இல்லையென்றாலும், 10 அல்லது 20 அல்லது 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தோல்வி உண்டாகும். எப்போதும் வெற்றி பெற்று கொண்டே இருக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.
"It is a reality that we will lose at some point of time, if it's not today then it will be after 10 / 20 or 50 years. We can't always keep winning." - @msdhoni ❤️ #Sportsmanship #Mentor pic.twitter.com/xXwhw7M09F
— Yazhini PM (@yazhini_pm) October 24, 2021
தோனியின் இந்த பழைய வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், கிரிக்கெட் மற்றும் விளையாட்டின் மீதான பார்வையை, வெற்றி தோல்வி குறித்த நிதர்சனத்தை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். 29 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் வெற்றியை விட்டுக்கொடுத்துள்ள இந்திய அணிக்கு, இந்திய ரசிகர்களுக்கு இப்போது இந்த அட்வைஸ்தான் மிக தேவை. தோல்வியால் துவண்டு போயிருக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வருந்த, இதை முன்கூட்டியே கணித்த தோனிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்