Virat Kohli: கோலி பற்றி அவதூறு: கடும் எதிர்ப்பால் பதிவை நீக்கிய இங்கி., வீரர்; நடந்தது என்ன?
நிக் காம்ப்டனின் இந்த பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு முதல் பேசு பொருளாக மாறியுள்ள இந்த சம்பவம்.
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் நிக் காம்ப்டன் இந்திய அணி கேப்டன் கோலியை பற்றி அவதூறாக விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இரு அணி வீரர்களும் களத்தில் ஆக்ரோஷ்மாக இருந்தனர்.
இரு அணி வீரர்களுக்கும் இடையே சில சலசலப்பு சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் நிக் காம்ப்டன் விராட் கோலியை பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “கோலி மிகவும் மோசமாக பேசக்கூடிய நபர். 2012-ம் ஆண்டு அவர் என்னை அசிங்கப்படுத்தியதை மறக்க முடியாது. அவர் செய்தது அவரின் குணத்தை தாழ்த்திக் காட்டியது. ரூட், டெண்டுல்கர், வில்லியம்சன் மற்றும் பல சாதனை வீரர்கள் கூட அமைதியாக இருப்பார்கள்” என காட்டமாக பதிவிட்டிருந்தார்.
நிக் காம்ப்டனின் இந்த பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு முதல் பேசு பொருளாக மாறியுள்ள இந்த சம்பவம். இந்நிலையில், கோலி பற்றிய பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து இன்று நீக்கியுள்ளார் நிக்.
முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் பும்ராவுக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கும் காரசாரமான விவாதம் நடந்தது. அதே போல, கோலி பேட்டிங் களமிறங்கியபோது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சனுடன் வாக்குவாதம் உண்டானது. இப்படி, வாக்குவாதங்கள் நிறைந்த டெஸ்ட் போட்டியாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது.
போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் 2014-ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. அத்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளாகவே அமைந்துவிட்டது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆல்-ரவுண்டிங் பெர்ஃபாமென்ஸைக் கொடுத்து வெற்றியை ஈட்டினர். இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித், புஜாரா - ரஹானே பேட்டிங், பண்ட் - ஜடேஜா பேட்டிங், டெயில் எண்டர்களின் ரன் குவிப்பு, வேகப்பந்துவீச்சாளர்களின் அதிரடி என ஒரு அணி வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்திருந்தது இந்திய அணி. அடுத்ததாக, மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 25-ம் தேதி தொடங்க உள்ளது.