Paine on Kohli: விராட் கோஹ்லி கொடுத்த அடியை தற்போதும் மறக்காத டிம் பெய்ன்...
விராட் கோஹ்லி இந்தியாவின் மற்றொரு வீரர் அவ்ளோதான், அவர் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை என்ற தனது முந்தைய கருத்தை மாற்றிக்கொண்ட டிம் பெய்ன்..
விராட் கோஹ்லியை நான் என்றுமே மறக்கமாட்டேன், உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் அவர் என்பது மட்டுமின்றி தனது போட்டிக்கு போட்டி என்ற குணாதிசயத்தால் எதிரணியின் கூடாரத்திற்கு உள்ளேயே புகுந்து அழுத்தம் கொடுக்க கூடியவர் என குறிப்பிட்டுள்ளார் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் "டிம் பெய்ன்"
இதில் என்ன முரண்பாடு என்றால் கடந்த ஆண்டு இந்தியா ஆஸ்திரேலிய சுற்று பயணம் சென்றபோது டிம் பெய்ன் ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார், அதாவது "விராட் கோஹ்லி இந்தியாவின் மற்றொரு வீரர் அவ்ளோதான், அவர் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை" என்று சொல்லி இருந்த நிலையில், தற்போது மீண்டும் விராட் கோஹ்லி குறித்து பேசியுள்ள டிம் பெய்ன் தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார்...
இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இருவருக்கும் இடையேயான மோதல் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதே தொடங்கிவிட்டது. மைதானத்தில் இருவரும் மோதிக்கொள்வதும், வார்த்தைகளை பரிமாறி கொள்வதும், விக்கெட் வீழும் பொது எதிரணியினர் மூஞ்சிக்கு நேரே கொண்டாடியதும் என அந்தத் தொடர் முழுவதுமே விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி அமைந்தது. ஆனால் ஆஸ்திரேலியஅணி அணி கடுமையாக போராடிய நிலையிலும், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கொடி நாட்டி சரித்திரம் படைத்தது. ஆசியாவில் இருந்து ஒரு அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற வரலாறு அன்று உருவானது.
அது குறித்து தற்போது மனம் திறந்துள்ள டிம் பெய்ன் "விராட் கோஹ்லியை பற்றி நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், எந்த அணியும் விராட் போன்ற ஒரு வீரர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் எனவே விரும்புவார்கள், எதையுமே அவர் சவாலாக எடுத்துக் கொள்பவர், மேலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி" என பாராட்டி பேசியுள்ளார்..
மேலும் கோஹ்லிக்கு எதிராக விளையாடுவது மிகவும் சவால் நிறைந்தது, அதே நேரம் அவருடைய போட்டி போடும் எண்ணம் மூலியம் எதிரணியின் கூடாரத்துக்கு உள்ளேயே புகுந்து சவால் விடக்கூடியவர் அவர்.. "நான்கு ஆண்டுகள் ஆனாலும் எனக்கும், அவருக்கும் இடையே நடந்த மோதல்கள் எனக்கு நினைவிருக்கிறது" என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்..
ஆனால் ஒரு ஆஸ்திரேலிய அணியாக, அவரின் ஆட்டத்தை பார்க்கும்போது "விராட் கோஹ்லியை வெறுக்கவே விரும்புகிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்...
2018-19 ஆம் ஆண்டுகளில் தோல்வியை சந்தித்த பின், டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மீண்டும் பல்வேறு காயங்களால் அவதிப்பட்ட இந்திய அணியிடம் இரண்டாவது முறையாக 2-1 என்ற கணக்கில், விராட் கோஹ்லி இல்லாத நிலையிலும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது...