அதிகம் பின் தொடரப்படும் டாப் -10 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் யார் தெரியுமா?
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரப்பட்டு வரும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
பொதுவாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை அதிகம் பேர் பின்தொடருவது வழக்கம். அதிலும் குறிப்பாக அவர்கள் திரைப்படம் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களாக இருந்தால் அவர்களை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அந்தவகையில் இந்தியாவில் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பின் தொடரப்பட்டும் வீரர் வீராங்கனைகள் யார் யார்?
10. கே.எல்.ராகுல்:
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை சமூக வலைத்தளங்களில் பலர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரை ட்விட்டரில் 5.6 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 8.9 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 10.1 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
9. சானியா மிர்சா:
இந்திய டென்னிஸ் வீராங்கனையை அதிகம் பேர் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பெண் இவர் தான். அத்துடன் கிரிக்கெட் அல்லாத விளையாட்டில் இடம்பெற்று அதிகம் பேர் பின் தொடரும் நபர் இவர் தான். இவரை ட்விட்டரில் 9.2 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 15 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 7.1 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
8. ஷிகர் தவான்:
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இப்பட்டியலில் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளார். இவரை ட்விட்டரில் 5.9 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 16 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 8.5 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
7. யுவராஜ் சிங்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங். இவர் ஓய்வை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் சமூக வலைத்தளத்தில் இவருக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரை ட்விட்டரில் 5.3 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 18 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 11 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
6. ஹர்திக் பாண்ட்யா:
ஐபிஎல் தொடர் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஹர்திக் பாண்ட்யா. அதன்பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். இவரை ட்விட்டரில் 6.7 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 10 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 18.3 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
5. சுரேஷ் ரெய்னா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இந்திய கிரிக்கெட் அணி மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக களமிறங்கும் இவர் சின்ன தல என்ற மிகவும் பிரபலம் அடைந்தவர். இவரை ட்விட்டரில் 18.7 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 6.1 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 15.9 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
4. மகேந்திர சிங் தோனி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இந்திய கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்கள் வரிசையில் தோனி முக்கியமானவர். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு களமிறங்கும் தோனி ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவரை ட்விட்டரில் 8.2 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 20 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 33 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
3. ரோகித் சர்மா:
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா. இவர் தனது அதிரடி ஆட்டம் மூலம் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இவரை ட்விட்டரில் 18.9 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 19 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 18.8 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
2. சச்சின் டெண்டுல்கர்:
கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் சமூக வலைத்தளங்கில் பின் தொடருகின்றனர். இவரை ட்விட்டரில் 35 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 27 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 29.1 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
1. விராட் கோலி:
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி. இவர் உலகம் முழுவதும் பல கிரிக்கெட் ரசிகர்களை தனது ஆட்டம் மூலம் ஈர்த்துள்ளார். அத்துடன் மைதானத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷமான செயல்பாடுகளும் பலரையும் கவர்ந்துள்ளது. இவரை ட்விட்டரில் 42.1 மில்லியன் பேரும், ஃபேஸ்புக் தளத்தில் 46 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 116 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.