மேலும் அறிய

TN Sports Hostel: அரசு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை - விண்ணப்பிப்பது எப்படி..?

முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம் சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலியில் இயங்கி வருகிறது. இதேபோல் மாணவிகளுக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோட்டில் செயல்பட்டு வருகிறது

TN Sports Hostel: அரசு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை - விண்ணப்பிப்பது எப்படி..?

மாணவ, மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சத்துவாச்சாரி வேலூரில் இயங்கி வருகிறது. இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6, 7, 8 ம் வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24ம் தேதி காலை 7 மணி அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெற உள்ளது.

இதன்படி மாணவர்களுக்கு தடகளம், இறகு பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், கபாடி, மேசைப்பந்து டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை மற்றும் பளு தூக்குதல் போன்ற விளையாட்டுக்கள் நடக்க உள்ளது.

மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், கபாடி, டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக் போட்டி மற்றும் மேஜை பந்து போட்டிகள் நடக்கிறது.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய கடைசி நாள் வரும் 23ம் தேதி மாலை 5 மணி ஆகும். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகளத் தகவல் தொடர்பு மைய செல்போன் 9514000777 என்ற எண்ணிலும், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி 04362 – 235633 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள் வரும் 24ம் தேதி காலை ஏழு மணி அளவில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் தஞ்சாவூரில் நடக்க உள்ளது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இணையதளத்தில் பதிவு செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டியில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget