Roger Federer Retirement: ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்! நெகிழ்ச்சி பதிவு..
Roger Federer Retirement: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Roger Federer Retirement: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், கடந்த சில ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், 41 வயதான ஜோரர் பெடரர் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் தொடங்கவுள்ள லவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஓய்வு குறித்து ரோஜர் பெடரர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என்னுடைய இந்த டென்னிஸ் பயணத்தில், என்னுடன் இதுவரை இருந்த என்னுடைய நண்பர்கள், போட்டியாளர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் என்னுடைய வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் காயத்தாலும், அறுவை சிகிச்சைகளாலும் அவதிப்பட்டு வருவது உங்களுக்குத் தெரியும். நான் இவற்றில் இருந்து மீண்டு வர மிகவும் முயற்சி செய்து வந்தேன். ஆனால், என்னுடைய உடலின் நிலை தற்போது என்னவென்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு 41 வயது ஆகிறது. என்னுடைய ஒட்டுமொத்த 24 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை 1,500 போட்டிகளுக்கு மேலாக விளையாடி இருக்கிறேன். இப்போது என்னுடைய ஓய்வை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.
அடுத்த வாரத்தில் லண்டனில் தொடங்கவுள்ள லவர் கோப்பை தொடருக்குப்பின் ஓய்வு பெறலாம் என முடிவு செய்து இருக்கிறேன். மேலும், தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவேன், ஆனால் டென்னிஸ் தொடர் மற்றும் கிராண்ட் ஸ்லாம் போடிகளில் பங்கேற்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டென்னிஸ் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது, டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதால் நான் என்னுடைய எல்லாவற்றையும் மிஸ் செய்வேன். நான் இந்த நேரத்தில் என்னுடைய அருமையான மனைவி மிர்காவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னை எப்போதும் எனது மனைவி ஊக்கப்படுத்தி வந்துள்ளார். அவர் எட்டு மாத கர்பிணியாக இருந்த போது கூட, நான் விளையாடும் போது நேரில் வந்து பார்த்து உற்சாக மூட்டினார். கடந்த 20 வருடங்களாக அவர் எனக்கு அளித்த ஊக்கம் மிகவும் முக்கியமானது. என்னுடைய நான்கு குழந்தைகளுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். அதிகப்படியான மகிழ்ச்சியான தருணங்களை என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் எனக்கு ஏற்படுத்தி தந்ததில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. என்னுடைய பெற்றோர்களுக்கும் நான் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். எனது சகோதரி எனக்கு அளித்த ஊக்கம் மிகவும் முக்கியமானது. அந்த ஊக்கம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் இப்படியான ஒரு விளையாட்டு வீரராக மாறியிருக்க முடியாது. நான் டென்னிஸில் இருந்து தான் விலகுகிறேன் உங்களிடம் இருந்து இல்லை எனவும் தனது ரசிகர்களுக்கும் தனது அன்பை தெரிவித்துள்ளார்.
To my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN