மேலும் அறிய

இந்திய ஜெர்ஸியை போட்டவுடன் என் மகள் கேட்ட கேள்வி - அஸ்வினின் நெகிழ்ச்சியான இன்ஸ்டா பதிவு !

இந்திய டி20 அணியின் ஜெர்ஸியை அணிந்த அஸ்வினிடம் அவருடைய மகள் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் வரும் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் பயிற்சி போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த உலகக் தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வாகியுள்ளார். இதனால் அவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஜெர்ஸியை போட்டு ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், "நீங்கள் இந்த கலர் ஜெர்ஸியை போட்டு நான் இதுவரை பார்த்தே இல்லையே அப்பா? என்று கூறிய என்னுடைய மகளை இந்தப் படத்தில் என்னால் விட முடியவில்லை. உனக்கு என்ன தோன்றுகிறது ப்ரித்தி?" என்று பதிவிட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக வெறும் டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்து வருவதால் அவரால் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஜெர்ஸியை அணியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

View this post on Instagram
 
A post shared by Ashwin (@rashwin99)

தற்போது  முதல் முறையாக 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருக்கு இந்த வாய்ப்பு  கிடைத்துள்ளது. இதனால் தான் அவருடைய மகள் இந்த கேள்வியை கேட்டுள்ளார். முன்னதாக ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியானது.  அதன்படி இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடர் முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு அக்டோப்டர் 18ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்த்து முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியும் துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த இரண்டு பயிற்சி போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் நேரலையாக வரும் என்று கூறப்படுகிறது. 

T20 world cup | டி20 உலகக் கோப்பைக்கு துபாயிலேயே தயாராகும் இந்திய அணி.. பயிற்சி போட்டிகள் ரெடி!

இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது. அந்தச் சுற்று போட்டிக்கு முன்பாக இரண்டு வலுவான அணிகளுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது வீரர்களுக்கு நல்லதாக அமைந்துள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. பின்னர் நவம்பர் 3ஆம் தேதி ஆஃப்கானிஸ்தனுடன் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகளுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 

இம்முறை சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் சூப்பர் 12 சுற்று மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget