மேலும் அறிய

CM Stalin Congratulates Chess Champion: செஸ்ஸில் உலகை திரும்பி பார்க்க வைத்த ப்ரக்ஞானந்தா.. நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்..!

16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவை முதல்வர் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில்  16 வயதானசென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை வென்றார். இந்த நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

முதல்வர் பாராட்டு 

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “ சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா-வுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்.” என்று பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M.K.Stalin (@mkstalin)

 

ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா பங்கேற்றார். இவர் 8 ஆவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். 

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் நன்றாக நகர்த்தல்களை மேற்கொண்டார். டார்ஸ்ச்  வகை கேமை பயன்படுத்திய பிரக்ஞானந்தா வெறும் 19 நகர்த்தலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மெக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் முதல் முறையாக உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். 

யார் இந்த பிரக்ஞானந்தா? 

சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய தந்தை ரமேஷ்பாபு மற்றும் தாய் நாகலட்சுமி எப்படி இவர்களின் கவனத்தை மாற்றுவது என்று நினைத்துள்ளனர். அந்த சமயத்தில் தீவிர செஸ் ரசிகரான ரமேஷ் பாபு தன்னுடைய மகள் வைஷாலியை முதலில் செஸ் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். 

அக்கா வைஷாலி செஸ் பயிற்சி வகுப்பிற்கு செல்வதை பார்த்த பிரக்ஞானந்தாவிற்கு சிறுவயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்காவிடம் இருந்து நான்கு வயது முதல் செஸ் கற்று கொள்ள தொடங்கினார். 5 வயது முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். தன்னுடைய 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார். 


CM Stalin Congratulates Chess Champion: செஸ்ஸில் உலகை திரும்பி பார்க்க வைத்த ப்ரக்ஞானந்தா.. நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்..!

இதைத் தொடர்ந்து  12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார். இதன்பின்னர் 2019 ஆண்டு நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அத்துடன் 2019 டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்திருந்தார். 

ஒருகட்டத்தில் இவர் மற்றும் இவருடைய அக்கா வைஷாலியின் செஸ் பயிற்சிக்கு பெற்றோர்களால் பணம் செலுத்த முடியாத சூழல் உருவாகியது. அப்போது ஒரு தொழிலதிபர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தார். அதேபோல் பிரக்ஞானந்தாவின் பள்ளி அவருக்கான பள்ளி கட்டணம் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றை தளர்த்தியது. இதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரக்ஞானந்தா தொடர்ந்து செஸ் விளையாட்டில் கவனம் செலத்தி வருகிறார். இவர் எப்போதும் அதிகம் பேசுவதில்லை. அவருக்கு பதிலாக அவருடைய ஆட்டம் தான் அதிகம் பேசும். திநகரிலுள்ள பிரபல செஸ் பயிற்சியாளார் ஆர்.பி.ரமேஷின் மாணவர்களில் இவரும் ஒருவர். தற்போது தன்னுடைய 16 வயதில் உலக சாம்பியன் மெக்ன்ஸ் கார்ல்சனை அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget