TN Cycling Race : சென்னையில் நடக்கப்போகும் பிரமாண்டமான சைக்கிள் ரேஸ்: பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
இந்த சைக்கிள் போட்டிக்காக தமிழக அரசு 2.67 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு விளையாட்டு மேப்பாட்டு ஆணையம் மற்றும் ஹெச்சிஎல் (HCL) நிறுவனம் இணைந்து நடத்தும் சைக்கிளிங் போட்டி அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேப்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிக்கான சீருடையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ‘அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சைக்கிளிங் போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடத்ததப்படும். முதல் பிரிவில் 55 கிலோ மீட்டர் கொண்ட பயணத்தில் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அடுத்து அமெச்சூர் குழுவின் கீழ் எம்டிபி சாலையில், 25 கிலோ மீட்டருக்கு போட்டி நடத்தப்படும். மூன்றாவது பிரிவில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று விருப்படுபவர்களும், பொதுமக்களும் 15 கிலோ மீட்டர் பந்தையத்தில் கலந்து கொள்ளலாம்.’
தமிழ்நாட்டில் நடந்த சர்வதேச போட்டிகள்
"சென்னையில் செஸ் ஒலிம்பியாட், உலக ஸ்குவாஷ் சாம்பியன் போன்ற போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இதனை தொடந்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆசிய சாம்பியன் ஹாக்கி டிராஃபியை 18 கோடி செலவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் ஆகஸ்ட் 14 முதல் 20 ஆம் தேதி வரை மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் போட்டியையும் நடத்த போகிறோம்.பாரா-விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஆறு மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்குகளில் பாரா விளையாட்டுக்கான அரங்கமும் அமைக்க உள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்தில் பாரா விளையாட்டு வீரர்களுக்காக ஊக்குவீக்கும் விதமாக எந்த ஒரு செயலையும் செய்ததில்லை.தற்போது தமிழ் நாட்டில் தான் முதல் முதலில் பாரா வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்களை அரசு செய்து வருகிறது" என பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்தியாவின் சர்வதேச சர்ஃபிங் நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டிக்காக தமிழக அரசு 2.67 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சுந்தர மகாலிங்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மோகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரிசு தொகை
இந்த சைக்கிள் பந்தயத்தில் மொத்தம் 5000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. அதனால் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை 30 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு வருகின்ற செப்டம்பர் 20 தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

