14ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி - டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
பெங்களூர் அணியில், விராட் கோலி கேப்டன், ராஜத் பட்டிதார், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், கிறிஸ்டியன், வாஷிங்கடன் சுந்தர், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சபஷ் அகமத், சஹால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ராகுல் சாஹர், மார்கோ ஜான்சென், போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளர்.
கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.