PV Sindhu: சீனாவின் ஹான் யூவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் - மாஸ்டர்ஸ் ஓபனில் கெத்து காட்டிய பி.வி.சிந்து!
Malaysia Masters 2024: மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Malaysia Masters 2024: மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் சீனாவின் யு ஹான்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து அசத்தியுள்ளார்.
அரையிறுதிக்கு தகுதி:
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார். மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 14-21 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூ-வை தோற்கடித்தார். இதையடுத்து, இந்த வெற்றிக்குப் பிறகு மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
India's ace badminton player PV Sindhu enters Malaysia Master Semifinals by defeating world No. 6 Han Yue of China.
— Swati Tandon ( Modi Ka Parivar ) (@SwatiTandon101) May 24, 2024
Heartiest congratulations and wishes for the future #PVSindhu #MalaysiaMasters2024 @Pvsindhu1 pic.twitter.com/cCA6d4nY9K
இந்த வெற்றியால் மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து ஐந்தாவது இடத்தில் உள்ளார். பி.வி.சிந்து இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக உபெர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் போட்டிகளில் விளையாடவில்லை. பி.வி.சிந்து கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனில் மட்டுமே பட்டம் வென்றார்.
சீனா வீராங்கனையை எளிதாக வீழ்த்திய பி.வி.சிந்து:
சீனா வீராங்கனை ஹான் யூவுக்கு எதிராக போட்டியில் ஆரம்பம் முதலே பி.வி.சிந்துவின் ஆதிக்கம் தலைதூக்கியது. முதல் ஆட்டத்தில் 21-13 என்ற கணக்கில் சீன வீராங்கனையை பி.வி.சிந்து எளிதாக வீழ்த்தினார். இதற்கு பிறகு, ஹான் யூ இரண்டாவது ஆட்டத்தில் வலுமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பி.வி. சிந்துவை 21-14 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து இருவரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
வாழ்வா? சாவா? என்ற கணக்கில் இருவரும் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-12 என்ற கணக்கில் ஹான் யூவை வீழ்த்தி கெத்து காட்டினார். இதையடுத்து, மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்துவின் பயணம்:
PV Sindhu into the Semi Finals of the Malaysia Masters S500 beating top seed Han Yue 21-13,14-21,21-12. First Semi finals of the year for Sindhu. Well done!#MalaysiaMasters2024 pic.twitter.com/AGL20NwLdc
— Rambo (@monster_zero123) May 24, 2024
இதற்கு முன், பிவி சிந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலக தரவரிசையில் 34வது இடத்தில் உள்ள கொரியாவின் யூ ஜின் சிம்மை தோற்கடித்திருந்தார். சுமார் 59 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 21-13, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் யு ஜின் சிமை தோற்கடித்து காலிறுதி இறுதிக்கு தகுதி பெற்றார். அதேசமயம், புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை நேருக்கு நேர் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 21-17, 21-16 என்ற செட் கணக்கில் கிறிஸ்டி கில்மோரை எளிதாக வீழ்த்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

