மேலும் அறிய

Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளில் மட்டும் தோல்வி; ஆனால் புள்ளிப்பட்டியலில் 11வது இடம் - ஏன் தெரியுமா?

Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணிதான் மொத்தம் உள்ள 12 அணிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் விளையாடிய அணி ஆகும்.

இந்தியாவில் தற்போது 10வது ப்ரோ கபடி லீக் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ப்ரோ கபடி லீக்கில் இம்முறை மொத்தம் 12 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என மொத்தம் 12 அணிகளும் கோப்பைக்காக மல்லுக்கட்டி வருகின்றது.

ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்:

இந்த லீக்கில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் மற்ற் அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் அதிகபட்சமாக பெங்களூரு புல்ஸ் அணி மட்டும் 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து, இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இதற்கடுத்து புனேரி பல்தான், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என 5 அணிகள் தலா 6 போட்டிகளிலும் தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் 5 போட்டிகளிலும் விளையாடி உள்ளது. இதில் இதுவரை குறைந்த போட்டிகளில் விளையாடிய அணி என்றால் அது தமிழ் தலைவாஸ். 

11வது இடத்தில் தமிழ் தலைவாஸ்:

தமிழ் தலைவாஸ் அணிதான் மொத்தம் உள்ள 12 அணிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் விளையாடிய அணி. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது. அதேபோல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணி என்றால் அது புனேரி பல்தான் அணிதான்.

இந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்து, 26 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அணி என்றால் அது தெலுகு டைட்டன்ஸ் அணிதான். தெலுங்கு டைட்டன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

6வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு:

புள்ளிப்பட்டியலை வைத்துப் பார்க்கும்போது தமிழ் தலைவாஸ் அணிதான் மொத்த அணிகளில் மிகக் குறைவான போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே அணி. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி இன்று  அதாவது டிசம்பர் 22ஆம் தேதி நடக்கும் பாட்னா பைரேட்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றியை உறுதி செய்தால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறும்.

இந்த போட்டியின் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதால், ரசிகர்கள் பட்டாளம் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆதரவாக இருக்கும் என்பதால் தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டி மட்டும் இல்லாமல், சென்னையில் களமிறங்கும் 4 போட்டிகளிலும் வெற்றி வாகை சூட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
Embed widget