Pro Kabaddi 2023: ’சொந்த ஊருல வந்து பாரு’.. சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய தமிழ் தலைவாஸ்.. டிக்கெட் விவரம் இங்கே!
Pro Kabaddi 2023 Tickets: 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தலைவாஸ் அணி தங்களது சொந்த மைதானமான சென்னையில் நாளை முதல் விளையாட இருக்கிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தலைவாஸ் அணி தங்களது சொந்த மைதானமான சென்னையில் நாளை முதல் விளையாட இருக்கிறது.
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி அதில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியையும் சந்தித்துள்ளது. கடைசியாக தமிழ் தலைவாஸ் அணி கடந்த வார இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கெத்து காட்டியது.
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி, தொடர்ந்து இரண்டு தோல்விகளுடன் திணறி வரும் பாட்னா பைரேட்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022 வரை தமிழ் தலைவாஸ் அணி தங்களது சொந்த மண்ணான சென்னையில் விளையாடவில்லை. இதையடுத்து, தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண் மற்றும் மக்கள் முன்பு களமிறங்குகிறது.
இதுகுறித்து நேற்று தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் சாகர் ரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ் தலைவாஸ் அணியை வழிநடத்துவதில் எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. எனக்கு எல்லா நேரங்களிலும் அணியின் முழு ஆதரவு கிடைக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு ரசிகர்கள் முன்னிலை விளையாடுவது எங்கள் உற்சாகத்தை தரும். சென்னையில் நாங்கள் பெறும் வெற்றி மிக முக்கியமானது. ரசிகர்கள் எங்கள் மீது எதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் என்பதை நான் நன்கு அறிவேன். மேலும், இந்த் ஆண்டில் அவர்கள் எங்களுக்கு அளித்த அனைத்து ஆதரவிற்கும் வெற்றியை அவர்களுக்கு திரும்பக் கொடுப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
எத்தனை போட்டிகள் சென்னையில் விளையாட உள்ளது தமிழ் தலைவாஸ்..?
நாளை (டிசம்பர் 22) முதல் டிசம்பர் 27ம் தேதி வரை தமிழ் தலைவாஸ் அணி 4 போட்டிகளில் சென்னையில் விளையாடவுள்ளது. அவற்றின் முழு விவரம் பின்வருமாறு...
- டிசம்பர் 22: தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
- டிசம்பர் 23: தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
- டிசம்பர் 25: தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
- டிசம்பர் 27: தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் பட்டியல்:
அஜிங்க்யா பவார், நரேந்தர், செல்வமணி கே, விஷால் சாஹல், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்ஷு சிங், நிதின் சிங், ஜதின், சதீஷ் கண்ணன், மாசானமுத்து லக்ஷனன், எம் அபிஷேக், ஹிமான்ஷு, சாகர் (கேப்டன்), ஆஷிஷ், மோஹித், சாஹில் குலியா, அமீர்ஹோசைன் பஸ்தாமி, ரோன், முகமதுரேசா கபௌத்ரஹங்கி மற்றும் ரித்திக்
போட்டி எங்கு நடைபெறுகிறது..?
View this post on Instagram
சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்களை பெற ரசிகர்கள் மேலே உள்ள இன்ஸ்டா லிங்கை க்ளிக் செய்து அதிலுள்ள UR கோடுகளை ஸ்கேன் செய்து பெற்றுகொள்ளலாம்.