Pro Kabaddi 2022: இன்று களம் இறங்குகிறது தமிழ் தலைவாஸ் அணி; மேட்ச் பாக்க ரெடியா..?
Pro Kabaddi 2022: நேற்று தொடங்கிய ப்ரோ கபடி ஒன்பதாவது சீசனின் இன்றைய போட்டிகள் யார் யாருக்கு என்று இந்த தொகுப்பில் காணலாம்.
Pro Kabaddi 2022: நேற்று தொடங்கிய ப்ரோ கபடி ஒன்பதாவது சீசனின் இன்றைய போட்டிகள் யார் யாருக்கு என்று இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டியின் வரவேற்பும் தாக்கமும் மற்ற விளையாட்டுகளிலும் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. அதன் வெளிப்பாடாக இருப்பது தான் ப்ரோ கபடி லீக் மற்றும் கால் பந்துக்கான ஐ.எஸ்.எல் உள்ளன. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று மிகவும் சிறப்பாக விளையாடுவதால் மக்கள் மத்தியிலும் இந்த போட்டிகள் குறித்து ஆர்வமும் அதிகரித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மாநில அளவில் விளையாட்டில் சாதித்து வந்த பல வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளையும் இந்த லீக் போட்டித் தொடர்கள் ஏற்படுத்தித் தருகின்றன.
நேற்று தொடங்கியுள்ள ப்ரோ கபடியின் 9வது சீசனின் இரண்டாவது நாளான, இன்று மாலை 7.30 மணிக்குத் தொட்யங்கி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
ப்ரோ கபடியில் இன்றைய போட்டிகள்:
1. மாலை 7.30 மணி - பாட்னா ப்ரியேட்ஸ்
2. இரவு 8.30 மணி - குஜராத் டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ்
3. இரவு 9.30 மணி - பெங்கால் வாரியர்ஸ் - ஹரியானா ஸ்டிலர்ஸ்
View this post on Instagram
இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் தபாங் டெல்லி அணி வீரர்கள், யு மும்பா அணி வீரர்களை பந்தாடியதோடு மட்டும் இல்லாமல், இந்த முறையும் நாங்கள் தான் சாம்பியன் எனும் அளவிற்கு யு மும்பா அணியை வீழ்த்தி மீண்டும் ஒரு முறை சாம்பியன் ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 41 - 27 புள்ளிகள் எனும் கணக்கில் தபாங் டெல்லி அணி, யு மும்பா அணியை ஊதித் தள்ளினர்.
அதேபோல், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து களம் இறங்கியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பெங்களூரு அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 34 - 29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
துவக்க நாளின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. ஆரம்பம் முதலே அனல் பறந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியும் உபி யோதா அணியும் ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை யார் வெற்றி பெருவார்கள் என பரபரப்பை கூட்டிக்கொண்டே சென்றனர். இறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியை உபி யோதா அணி 34 - 32 எனும் புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ப்ரோ கபடி போட்டித் தொடர் டிஷ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போட்ர்ஸில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.