Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!
கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூனா விருது வென்ற வருண் குமாருடன் தனக்கு 17 வயதாக இருந்தபோது நட்பு ஏற்பட்டதாக அந்த பெண் எப்.ஐ.ஆரில் கூறியுள்ளார்.
![Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்! pocso case against indian hockey player varun kumar in bangalore latest tamil sports news Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/07/703329b97a1477575328df2c4eb30d001707269863464571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, வருண் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, கியான் பார்தி காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட வருணை ஜலந்தரில் தேடி வருகின்றனர். வருண் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது ஜலந்தர் பகுதியில் வசித்து வருகிறார்.
என்ன நடந்தது..?
பாதிக்கப்பட்ட பெண் தற்போது விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூனா விருது வென்ற வருண் குமாருடன் தனக்கு 17 வயதாக இருந்தபோது நட்பு ஏற்பட்டதாக அந்த பெண் எப்.ஐ.ஆரில் கூறியுள்ளார். அந்த நேரத்தில், வருண் குமார் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
எப்.ஐ.ஆரில் இருவரும் பழகியபோது, பாதிக்கப்பட்டவருக்கு 17 வயதுதான். வருண் குமாரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) பயிற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. வருண் குமார் தன்னை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வற்புறுத்தினார். தொடர்ந்து, சந்திக்க வருமாறு கூறி அவரது காதலையும் என்னிடம் வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் நானும் காதலை வெளிப்படுத்தினேன்.
பின்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் வருண் குமார் எதிர்காலத்தை பற்றி பேசுவதாக கூறி என்னை பெங்களூரு ஜெய்நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து, அந்த நேரத்தில் உள்ள நான் மைனர் என்பதை அறிந்திருந்தும் என்னிடம் பாலியல் ரீதியாக உறவு வைத்து கொண்டார். அப்போது, அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோதும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி வருண் குமார் தொடர்ந்து தன்னிடம் ஐந்து வருடமாக உடல் ரீதியாக என்னிடம் பழகி வந்தார். அதன்பிறகு, வருண் குமார் தன்னிடம் பேசிவதையும், பழகுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார்.
மிரட்டல்:
பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் வருண் குமார், இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டுவேன் என மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஹாக்கி வீரர் மீது பெண்ணிடம் கடந்த திங்கள்கிழமை போக்சோ சட்டம் மற்றும் அது தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். வழக்குப்பதிவு செய்து கொண்டதை அறிந்துகொண்ட வருண் குமார் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணி தற்போது நடந்து வருகிறது.” என்று தெரிவித்திருந்தார்.
யார் இந்த வருண் குமார்..?
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த வருண் குமார், கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியா ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றபோது, ஹிமாச்சல பிரதேச அரசு வருண் குமாருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்திருந்தது. 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)